நிறங்கள் - மழையில்

நிசப்தம் நீலமாக;

அப்புறம்

ஒழுங்கு சிதைந்த சச்சதுரமாக.

மேலே அழுத்தும் ரப்பர்ப் பொதியாக.

நிறம் அதுவேயாக.

மசங்கலாகப் பழுப்புப் படகொன்று.

நிறம் மரித்த வௌிநோக்கிச்

செலுத்தப் பட்டேன்.

நீரின் துளியொன்று உதிர,

நீலம் இழைதொய்ந்து குழிய,

மேலும் துளிகள்; நின்று போனது.

புரண்டு படுத்த புலனும் மெல்லத்

துளிகள் விழுவதைப் புனைய முயல,

வேகங் கொண்ட படகின் உள்ளே

கருவாகக் கால்மடித்து, தலைகவிழ்த்து.

நிறங்கள் பற்றிக் கவலையில்லை -

இபோதைக்கு.

('ழ' )