ஆத்ம சக்தி

1. அடிமைப்பட்ட அந்தச் செம்மை நாட்டின் உள்ளத்தில் தேசபக்தி கொழுந்து விட்டெரிந்து கொண் டிருந்தது. ஆளுவோர் மேல் அந்நாட்டுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்புக் கொஞ்சமல்ல. விடாது தீயைக் சுக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் கீழ் குடித்தனம் பண்ணு வது போல், படையை வைத்துக்கொண்டு காலந்தள்ளி வந்தார்கள் ஆளுவோர். ஆயினும் ஆரை விட்டது ஆளும் ஆசை. ஆட்சியினால் வரும் சுரண்டற் பொருள் போய் விட்டால் என்ன பண்ணுவார்கள் ஆளுவோர்?

செம்மை நாட்டார் நிராயுதபாணிகள். ஆயுதங்கள் இல்லாமை ஒருபுறமிருக்க சுதந்தரத்தை விரும்புவோர்க்கு இருக்க வேண்டியவைகளில் அநேகம் செம்மை நாட்டில் இல்லை என்பதும் வாஸ்தவந்தான். ஆனால் ஒன்று, செம்மைநாட்டில் பூத்துக் காய்த்துள்ள ஆத்ம சக்தி ஜகத்தையே எதிர்க்க வல்லது.

செம்மை நாட்டில் ஜனங்களை சுதந்தரப் பாதையில் நடத்திப் போகின்றவர்களில் பிரதானமானவர்கள் இரு தலைவர்கள். ஒருவன் அழகன். ஆநந்தன் மற்றவன், இருவரும் ஒத்த மனோபாவம் உடையவர்கள். உருவத்தில் இருவராகக் காணப்பட்டார்கள். எண்ணத்தால் இருவரும் ஒரே இரும்புக்குண்டு.

2. வழக்கப்படி அவள் அழகனை ஒரு தனியாகக் கண்டாள். அவள் பெயர் பட்டு, ஆனந்தனின் தங்கை. எனக்கு உறுதி கூறினால் போதும் என்று கெஞ்சினாள். அழகன், சொன்னான்: நமது தேசத்தை உன் அண்ணன் எதிர்க்கவில்லை. மெய்தான். ஆயினும் நீ உயர்ந்த ஜாதிப் பெண். அழகனின் இந்த வார்த்தை பட்டுக்குக் கொடூர மாக இருந்தது. அதைப்பற்றி உனக்கென்ன. ஜாதியைத் தான் தள்ளிவிட்டோமே. நாட்டின் விடுதலைக்கு ஜாதி ஒரு முட்டுக்கட்டை யல்லவா? "கரை கடந்து பாயும் என் காதலுக்கு ஒரு தேக்கிடம் காட்டு" என்றி பதைத்தாள். அழகன், "சுதந்தரமில்லை . நாம் அடிமை. இதில் கல்யாணம்" என்றான். 'சுதந்தரந்தான் வந்து விடப் போகிறதே. சரி வந்தபின் மணந்து கொள் - என்ன?'' என்று கேட்டாள். அழகன் ஒத்துக்கொண்டான் ஆற்றொணாத் துன்பத்தால் இன்னொரு வரம் கேட்டாள் பட்டு. "மணம் ஆகிறவரைக்கும் நாம் தனி வீட்டில் இருந் தால் என்ன?" என்றாள். அவன் ஒப்பவில்லை . "சுதந்திரம் கிடைத்த மறு நிமிஷம் கல்யாணம் இந்த ஒரு சந்தோஷந் தான் பட்டு உயிரோடு காலம் தள்ளி வருவதற்குக் காரணம்.

3. செம்மை நாட்டைப் பிடித்து, அதில் தன் படை யையும் தனது பிரதி நிதியையும் வைத்து ஆண்டுவந்த சென்னிநாட்டுப் பொன்னரங்க மன்னன் செம்மை நாட்டுக்கு சுதந்தரம் கொடுத்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் செம்மை நாட்டுக்கு விடுதலை கொடுத்த பின், அது தன்னைத்தான் காத்துக் கொள்ளவோ ஆண்டு கொள்ளவோ முடியாமல் போனால் சில சமயம் தன் கையைவிட்டு அந்தச் செம்மை நாடு தன் எதிரியாகிய நடுநாட்டுக்கு உட்பட்டுவிட்டால் ஆபத்து. இதற்காகச் சென்னி நாட்டுப் பொன்னரங்கன் செம்மை நாட்டின் நிலையறியவும் விடுதலை கொடுக்கவும் வருவ தாகச் சொல்லி அனுப்பினான் செம்மை நாட்டுக்கு. செம்மை நாட்டின் உள்ளம் ஆனந்தக் கடல்,

4. பெரியதோர் வரவேற்புக்குப் பின், பொன்ன ரங்கன் ஆநந்தன் இல்லத்தில் தங்கி, செம்மை நாட்டின் அறிஞர்கள் பிரதான குடிகள் ஆகிய பலரை அழைத்துப் பேசினான். நகரங்கள், கிராமங்கள், பொது ஸ்தாபனங்கள் ஆகிய இடங்கட்கு நேரில் சென்றும் நிலைமையை அறிந்தான்.

சேரி ஜனங்கள் சுதந்தரம் கிடைத்ததும் தீண்டாமை ஒழியும் என்ற விஷயத்தில் சந்தேகம் தீர்ந்திருந்தார்கள். ஏழைகள் பணக்காரர் ஆவதும் சுதந்தர நாட்டில் தான், நல்ல பொதுவான சட்ட திட்டங்களும் அப்போதுதான். சுதந்தரம் ஆத்மா அவர்கட்கு.

5. பொன்னரங்கர் நம் நாட்டுக்குச் சுதந்தரம் தருவ தாக ஓர் சுதந்தரப் பிரகடனம்'' சித்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து மக்கள் சந்தோஷக் கடலில் ஆழ்ந்திருந்தனர். பட்டு, தன் இருப்பிடத்திலிருந்து ஓடி அழகனிடம் உத்தரவு கேட்டாள், சோலையில் தோழி மாருடன் ஆனந்தக் கூத்தடிக்க.

அறிஞர்கள், பொன்னரங்கன் தங்களுக்குச் சுதந்தரம் கொடுக்க இசைந்ததற்கு பொன்னரங்கன் மேல் பாய, நடுநாட்டான் படை திரட்டுகிறான் அதனால் தான் நம்மைச் சுதந்தரம் அளிப்பதன் மூலம் தட்டிக் கொடுக் கிறான் என்று காரணம் சொல்லிக் கொண்டார்கள். தேச பக்தர்கள் தமது ஆத்ம சக்தியின் வேகத்தை வியந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ஆத்மசக்தி செய்த வேலையை எடுத்துக் காட்டினார்கள்.

6. பொன்னரங்க மன்னர் ஆனந்தனின் உப்பரிகை யில் காற்றோட்டமாக வீற்றிருந்தபடி சுதந்தரப் பிரகட னத்தை எழுதிக் கொண்டிருந்தார். இடையில் அவர் கண்கள் திறந்த ஜன்னலின் வழியாகக் குதித்துச் சோலையைத் தடவின. சோலையில் பட்டு, தோழிமா ரோடு கூத்தடித்துக் கொண்டிருந்தாள், கண்ணைப் பறிக்கும் கட்டழகோடு; பொன்னரங்கன் உள்ளம் மறுக்க முடியாத ஓர் முடிவுக்கு வந்தது. உயிரோடு வாழ்வ தென்பது பட்டோடு வாழ்வது தான்.

7. தனது பிரதிநிதியுடன் இதுபற்றி யோசித்தான். பட்டு அழகனைக் காதலிப்பது தெரிந்தது. சுதந்தரம் கொடுப்பதை நிறுத்தி வைக்கிறேன். பட்டு சிடைத்ததும் அதை மேளதாளத்தோடு தருகிறேன் என்று கூறிவிட்டான் ரகசியமாகத் தன் பிரதிநிதியுடன்.

8. பின் பொன்னரங்க மனனன் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான். பட்டை எனக்குக் கொடுத்தால் சுதந்தரத்தை நான் கொடுப்பேன்'' என்று.

பட்டு பொன்னரங்கனை விரும்பவில்லை என்று அழகன் கேள்விப் பட்டான். அவளை நான் அரசனுக்கு ஆட்படச் சொல்ல மாட்டேன். என் காதலியைக் கொடுத்து நாட்டுக்கு உரிமை பெற முடியாது என்று குதித்தான்.

ஆள்வோரின் படைக்கத்தி சுழற்றவும் ஆரம்பித்து விட்டது. குடிகள் துன்பம் தாங்க முடியவில்லை. பட்டின் உற்றார், அண்ணாகிய ஆனந்தன் ஆகியேரர் பலமுறை அரசனைப் பேட்டி கண்டார்கள். இதோ முடிவு, அதோ சமாதானம் என்று நிமிஷத்தை எண்ணியபடி இருந்தார் கள் ஜனங்கள், படை வீரர் தம்மைப் படுத்தும் பாடு தாங்காமல்! ஆத்மசக்திக்குத் தெரியும் நேரம். அப்போது அது சும்மா இருந்தது படையை எதிர்க்காமல்

9. பட்டு, காவலில் வைக்கப்பட்டாள் என்றும் அவள் உயிர் போனாலும் அழகனையன்றி வேறொருவரைக் காதலிக்க முடியாது என்று கூறுகிறாள் என்றும் தக்க இடத்திலிருந்து, அதாவது உயிர் போன்ற நண்பனாகிய ஆநந்தன் வாயிலாகக் கேள்விப்பட்டான். அடிக்கடி அந்த இன்பமான நிமிஷங்களைத் தேன் போல் அழகன் அனு பவித்தாலும் நாட்டு மக்கள் படும் துன்பத்தையும் தன்னால் சுதந்தரம் தடைப்பட்டு விட்டதையும் அவன் நினைந்து வருந்தாமலில்லை.

10 ஊர் நாட்டாண்மைக்காரன் ஜனங்கள் சகிதம் அழுது கொண்டே வந்து அழகனைக் கண்டார்கள். *உங்கள் காதல் சேஷ்டையால் எங்கள் நிலை இப்படி ஆகலாமா?'' என்று கேட்டார்கள். பட்டு மன்னனை மணந்து கொண்டால் எங்கட்கு இப்படிப்பட்ட தொல்லை ஏற்படாதே'' என்று கேட்டார்கள்.

"நீங்கள் பட்டு மேல் எண்ணங் கொண்டு அதை வெற்றிகரமாக முடிப்பதற்காகத்தான் ஜனத்தலைமை வசிக்க வந்தீர்களா?'' என்று சுடச்சுடக் கேட்டார்கள்.

அழகனின் பதைபதைப்பும் துக்கமும் சேர்ந்து அவனை ஒருபதிலும் சொல்ல முடியாத நிலையில் வைத்தன. மீண்டும் ஜனங்கள், நாங்கள் சின்னத் தலைவராகிய ஆநந்தனைக் கண்டு முறையிட்டோம். அவர் தலைவரைக் காணுங்கள்" என்று கூறிவிட்டார். என்றார்கள். ஏன் ஆநந்தன் சமாதானம் கூறியிருக்கக்கூடாது. என்று அழகன் நினைத்தான். நண்பனைத் தன் நெஞ்சம் நிந்தித் தது பற்றித் தானே வருந்தினான்

அழகன் ஜனங்களை நோக்கி, " அவள் மன்னனை மணந்து கொள்வதை நான் வேண்டாம் என்று கூற வில்லையே. நான் அவளைக் காதலிக்கும் போது இத்தகைய நிலை ஏற்படும் என்று எப்படித் தெரியும்?'' என்று பரிதாபமாய் அழுது கூறினான். சீக்கிரம் நிலை மையை ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லி அனுப்பினான்.

11. ஆநந்தன் நள்ளிரவில் இரைக்க இரைக்க கத்தி யும் கையுமாக ஓடிவந்தான் அழகனிடம். ''என் தங்கை யால்! அவளால் தானே அழகா?- அவளில்லாவிட்டால் மன்னன் மனோ நிலை இப்படியாகி இராதே!" என்றான். அழகன் என்ன செய்தாய் அதற்காக?'' என்று கேட்டான்.

ஆநந்தன், நான் அவளைக் கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். சென்றேன். அவளைச் சுற்றிலும் நியமித்திருந்த காவற்காரர் விழித்துக் கொண்டார்கள். நான் ஆள் தெரியாமல் ஓடிவந்தேன். நீ என்னை மன்னித்து விடு! அவள் உனக்குரிய பொருள்" என்றான்.

அழகன் : அவளிறந்தால் அவன் காதலுக்கும் பங்கம் ஏற்படாது. நாட்டின் சுதந்தரமும் அளிக்கப்பட்டு விடும் என்பது உன் எண்ணமாகும். உன் தியாகம் நன்று. உடன் பிறந்தாளைப் பலியிட வேண்டியதாயிற்று சுதந்தர தெய்வத்துக்கு?

அழகன் கண்ணீர் சொரிந்து கூறுவான் : ஆநந்தா வேறு வழியில்லை. நான் அதைச் செய்கிறேன். அவள் போன பின் நான் இருப்பது கிடையாது. அவளைத் தொடர்கின்றேன். சுதந்திர தேசத்தை நீ நல்ல முறையில் ஆண்டிரு. வர்ணாஸ்ரம தர்மம் இந்தக்காலத்தில் மக்களின் ஒற்றுமையைக் கெடுக்கிறது. அது மக்கள் முன்னேற்றத் திற்குப் பெரியதோர் முட்டுக்கட்டை. அதை ஒழி. நல்ல தோர் சட்டம் செய். மக்கள் சமம் என்ற வேதத்தை நடை முறையில் வை நான் இப்போதே உன்னிடம் விடை கேட் சிறேன். கடைசி விடை. அடுத்த ஜன்மத்தில் உன் நட்புக் கிடைக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. நானும் பட்டும் இறப்புலகில் ரகசிய சந்திப்பும் மறுபிறவியில் இந்த நாட்டில் ஏழைச் சதிபதியாகவாவது பிறந்து வாழும் இன்ப வாழ்க்கையும், ஆண்டவன் கிருபை செய்யட்டும் என்றான்.

அழகன் கண்ணீர் விட்டான். அழகன் மேலும் பேசி னான். ஆயினும் அப்பேச்சில் எழுத்துக்கள் ஒன்றும் புரிய வில்லை. ஆநந்தன் கேட்டிருந்தான். இவன் விழிகள் மூடியிருந்தன. ஆநந்தன் தன் நண்பனைக் கும்பிட்டு, "அழகா நீயே உன் உயிரை மாய்த்துக் கொண்டதாக ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடு. உன்னுடைய ஆசீர்வாதம் எனக்கு எதேஷ்டமாகப் பயன்பட வேண்டும்'' என்று கூறினான்,

ஆத்திரத்தோடு வெகு விரைவில் அழகன் அவ்வாறே எழுத ஆரம்பித்தான். ஆநந்தன், இடையில் நான் சொன்ன மாதிரி எழுது. நீ இப்போது கூறியபடி பிற் காலத்தின் என் ஆட்சிமுறை இவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அதில் குறிக்காதே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எச்சரித்தான். தரும தேவதை "அழகனை வாழ்த்தத் தொடங்கினாள். அவனால் தியாக லக்ஷணம் உலகுக்கு விகசிதமாகப் போகிறதென்று."

12. அதே இரவு. அழகன் வீட்டின் முன்புறம் கருடிக் கூடம். அது தனியறை போன்றது. அங்கே செம்மை நாட்டின் அறிஞர்கள் சிலர் காத்திருந்தார்கள். அவர்கள் வாய்கள் முணுமுணுவென்று பேசிக் கொண்டிருந்தன. அழகன் வீட்டின் பின் கட்டில் கும்பிட்டபடி இருந்தான்.

பிரிந்து போன ஆநந்தன் அழகன் வீட்டின் தோட்டத்து வாசல் வழியாக உட்புகுந்தான். "நான் மாய்த்தேன் என் தங்கையைத் தேசத்துக்காக'' என்று ஆநந்தன் கூவி அழக னின் கால்மாட்டில் வீழ்த்தான், தடுமாறி விழுபவன் போல. அதை அழகன் கேட்டான். ஆநந்தனைப் பார்த்தான். "சென்றாயா என் உயிரே" என்து பட்டைக் குறித்துச் சொன்னான். அவன் கால்கள் கருடிக் கூடத்தின் கதவண்டை கொண்டு சேர்த்தன அழகனை. அவன் கருடிக் கூடக் கதவைத் திறந்து கத்தி ஒன்றைத் தூக்கினான். அறிஞர்கள் எழுந்து நின்றார்கள் தலைவனுக்கு மரியாதை செய்யும் முறையில். அவன் அறிஞர்களை எதிர்பாராத விதமாகப் பார்த்து. "என் உயிர் முடிந்தது தேசத்துக்காக" என்று கத்தியை கழுத்தில் வைத்தான். 'ஒரு சேதி' என்று கூவித் தடுத்தனர் அறிஞர்கள்.

அழகன் : அவள் இறந்தாள்

அறிஞர் : அவள் மாயவில்லை

அழகன் : ஆநந்தன் மாய்த்துவிட்டான்

அறிஞர் : அவன் பொய் சொன்னான்.

அழகன் : பொய் கூறமாட்டான்.

அறிஞர் : ஜாதி வெறிபிடித்த பொய்யன்.

அழகன் : அவள் எங்கே ?

அறிஞர் - அரசனோடு ஒத்துப் போனாள்.

அழகன் : ஏன் அவன் பொய் கூறினான்.

அறிஞர் : உன்னைச் சாகடிக்க.

அழகன் : அதனால் அவனுக்கு என்ன வரும்?

அறிஞர் : உம் பதவி அவனுக்கு வரும்.

அழகன் : பதவி அவனுக்கேன்?

அறிஞர் : பதவி தவிர மற்றவை அவனுக்கேன்?

அழகன் : என்ன ?

அறிஞர் : வர்ணாஸ்ரம முறைப்படி உயர் ஜாதிக்குச் செல்வாக்கிருக்கும்படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது தான் அவனுடைய, அவன் இனத்தாருடைய எண்ணம்.

அழகன் : எப்போதிருந்து?

அறிஞர் : ஆதிமுதல்

அழகன் : நீங்கள் அறிவீரா?

அறிஞர் அறிவோம்,

அழகன் : ஏன் கூறவில்லை ?

அறிஞர் : நேரம் ஏது?

அழகன் : இப்படிப்பட்ட வஞ்சகனா?

அறிஞர் : அவன் மட்டுமா?

அழகன் : ஒருவரும் நல்லவரில்லையா?

அறிஞர் : இருக்கிறார்கள்

அழகன் : யார்?

அறிஞர் : பிறகு சொல்லுவோம். ஐயனே கத்தியைக் கொடும். நாங்கள் சொல்லுவது சத்தியம்.

அழகன் : (கத்தியைக் கொடுத்து) தன் தங்கையை எனக்குத் தந்தான். அவனுக்கு உயர் ஜாதி எண்ணமிருந்தால் சம்மதித்திரானே?

அறிஞர் : அவன் உயர் ஜாதி அல்ல என்பது நம்மை விட அவனுக்கு நன்றாய்த் தெரியும்.

அழகன் : பின்?

அறிஞர் : சுயநலம்.

அழகன் : இன்னுமா அந்த அவிவேகம்?

அறிஞர் : தீர்ந்துவிடுமா?

அழகன் : எப்போது?

அறிஞர் : ஊழிக்காலத்தில்.

அழகன் : மேலே நடக்க வேண்டியது?

அறிஞர் : அரசனுக்கு ஒன்றும் தெரியாது. அவன் அரசனுக்கு ஒத்துக் கொண்ட மறு நிமிஷம் உம்மை ஒழிக்க ஆநந்தன் செய்த ஆநந்தச் செய்கைகள் இவை.

அழகன் : இப்போது? அறிஞர் : எல்லோரும் ஓர் குலம் ஆக்குவோம்.

எல்லார் தளைகளையும் அறுத்து ஆற்றுவோம். அரசன் துணை செய்க.

அழகன் : அதன் பின்

அறிஞர் : அரசன், இங்குள்ள அவன் படை தரணி போக வேண்டியது தான், செம்மை நாடு சுதந்தர நாடு?