பக்த ஜெயதேவர்

ஜகந்நாதத்தில் பில்வ வனம் என்னும் பார்ப்பனச் சேரியில் நாராயண பட்டர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவி கமலாபாய்.

அவர் அருந்தவப் பிள்ளை ஜெயதேவர்.

அதே ஜகந்நாதத்தில் அக்னிஹோத்ரன் மகள் பத்மாவதிக்குக் கலியாணம் ஆக வேண்டியதிருந்தது. கண்ணபிரான் அக்னிஹோத்ரனின் கனவில் தோன்றி, ஜெயதேவ னுக்குக் கொடு என்று கூ றிப்போக, ஜெயதேவரின் வீடு சென்றார்கள்.

நாராயண பட்டருக்கும் கண்ணன் கனவில் சொல்லி யிருந்ததால் திருமணம் முடிந்தது.

ஜெயதேவரும் பத்மாவதியும் இல்லறத்தை நடத்திவரு நாளில் நாராயண பட்டர் பிள்ளையை அழைத்து நான் தவம் புரியக் காடு செல்வேன், நீ உலகில் கீர்த்தியோடு வாழக்கடவாய் என்றார். ஜெயதேவர் வருந்தியும் நாராயண பட்டர் கேட்கவில்லை; போய்விட்டார்.

ஜெயதேவர் சகல சாஸ்திர பண்டிதர். தர்மவான். அனைவரும் அவனைப் புகழ்ந்து வரலானார்கள். பில்வா வில் ஒரு பிரபல வியாபாரி இருந்தான். நற்குண நற் செய்கையுடையவன். அவன் ஜெயதேவரை அடைந்தான். ஞானோபதேசம் பெற ஜெயதேவர் ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். அன்று முதல் அவன் ஜெயதேவர் கற்பித்த மார்க்கத்தில் நின்று ஆத்மானந்தத்தை அனுபவித்து வந்தான்.

ஜெயதேவர் பாகவதத்தை அனுதினம் ஓதுவார் கலி யுகத்தில் சண்ணன் புகழைத் துதிப்பதைக் காட்டிலும் வேறு மார்க்கம் கிடையாது. முக்திக்கும் அதுதான் மார்க் கம் என்று பாகவதம் விதிக்கிறது.

பஜனை செய்வாரானார். அவர் உலகம் வியக்கத்தக்க சங்கீத ஞானியாயும் கவிதா ரத்னமாகவும் விளங்கலானார். ஜெயதேவர் கீத கோவிந்தம் பாடினார் கீதகோவிந்தம் என்ற சாஸ்திரத்திற்கு மகத்வம் அதிகரித்தது. ஒரு சமயம் ஜெகந்நாத க்ஷேத்திரத்திற்கு ஜனங்கள் கீத கோவிந்தம் பாடி, பஜனை பண்ணியிருக்கையில், " கீத கோவிந்தத் தால் நாம் ஆனந்த மடைந்ததாம். அதை நாம் அங்கீகரித் தோம்" என்று அசரீரி எழுந்தது. அதனால் கீத கோவித் தத்தின் மதிப்பு அதிகரித்தது.

ஓட்டிர தேசத்திற்கு அரசன் சாத்து விகன். அவன் மகா பண்டிதன். அவன் தேசத்தில் கீத கோவிந்தம் மிகவும் பிர சித்தம் அடைந்திருப்பதை அவன் அறிந்தான். ''பகவானை கீர்த்தனையால் பாடுவது சிரேஷ்டமே'' என்ற முடிவுக்கு வந்தவனாய், தானும் 100 அழகிய கீர்த்தனங்கள் செய்து வெளியிட்டான். ஆயினும் அவைகளை ஜனங்கள் விரும்ப வில்லை . இதனால் அரசன் பண்டிதர்களையும் பிரபலஸ் தர்களையும் கூட்டிக் கீத கோவிந்தத்தைப் போல் என் கீர்த்தனங்களும் உயர்ந்தவை என்றும்,

- மேலும் இருவகைக் கீரத்தனங்களும் ஒரே கடவுளைப் பற்றியவை என்றும் கூறினான்.

பண்டிதர்கள் அரசனை நோக்கி, நீங்கள் பொறாமை யால் அந்தக் கீர்த்தனங்களை இயற்றினீர்கள். மேலும் ஜெயதேவர் ஒப்பற்ற பெரியவர்; ஞானி. அவரின் கீத கோவிந்தத்தைக் கடவுள் அங்கீகரித்து வியந்தார்.

அதுபோல நீங்களும் பெருமானின் அங்கீகாரத்தைப் பெற முயலுங்கள் என்றார்கள்.

அதற்கு அரசன் ஓர் பந்தயம் ஏற்படுத்தினான். அதன் படி பண்டிதர்களும், அரசனும் கிருஷ்ண ஜெயந்தியன்று ஜெகந்நாதம் சென்று கீத கோவிந்தத்தையும் அரசன் கீர்த்தனைகளையும் காப்பிட்டுக் கோவிலில் வைத்துப் போய்விட்டார்கள்.

விடியற்காலையில் சன்னதியைத் திறந்து பார்க்க,

கீத கோவிந்தத்தின் தலையேட்டில் இதை நாம் அங்கீ கரித்தோம் இப்படிக்கு ஜகந்நாதன் என்றிருந்தது. அரசன் வருந்தினான். வீடு வந்து உணவு நீத்துக் கடவுளைக் கெஞ்ச ஆரம்பித்தான். அன்றிரவு அவன் தூக்கத்தில் கடவுள் தோன்றி ஜெயதேவர் மகிமை கூறி, நீயும் கீத கோவிந்தத்தைப் பாராயணம் பண்ணுவாயாக என்ன,

அரசன் அவ்வாறு செய்யத் தலைப்பட்ட அளவில் கீத கோவிந்தம் உலகப் பிரசித்தம் அடையலாயிற்று.

ஒருநாள் அக்னிஹோத்ரன் தன் மருமகன் பெருமை கேட்டுப் பார்க்கவந்தான். ஆனந்தம் கொண்டான். மருமக னைப் பூசித்துத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். அங்கும் மக்கள் அனைவராலும் பூசிக்கப்பட்டிருந்தார் ஜெயதேவர். அங்கு முக்கிய மாணாக்கனாகிய பகவத் தாஸன் வந்து சுவாமி தாங்கள் பில்வாவுக்கு வந்து போக வேண்டும் என்ன, ஜெயதேவர் சென்று இருந்து - பிறகு. புறப்பட்டார்.

புறப்படும்போது தாஸன் ரத்தினங்கள் பொற்கட்டிக ளைப் பல்லக்குப் போகிகளிடம் கொடுத்து - இவற்றைச் சுவாமியின் மனைவியாகிய பத்மாவதியிடம் கொடுத்து வந்து சேர்ந்ததென்று ஓலைபெற்று வரவேண்டும் என்று அனுப்பியிருந்தான்:

பல்லக்குக் காட்டைக் கடக்கையில் திருடர் மறித்தார் கள். ஜெயதேவர் எம்மிடம் ஒன்றுமில்லை என்றார்.

திருடர் பல்லக்கைச் சோதிக்க, போகிகள் ஒருபக்கம் வைத்திருந்த தங்கம் ரத்தினம் கிடைத்தன. அவைகளை எடுத்துக்கொண்டு ஜெயதேவரையும் கால் கைகளை வெட்டி இவரைத் தூக்கிக் கிணற்றில் போட்டுப் போனார்கள்.

ஜெயதேவர் கிணற்றில் சமாதி யோகத்தில் கூடிக் கவலையற்று இருந்தார்.

சாத்துவிக மன்னன் வேட்டைக்கு வரும் வழியில் கிணற்றின் உள்ளிருந்து ஓர் ஒளி தெரிவதைக் கொண்டு கிணற்றைச் சோதித்தான். ஜெயதேவர் நிலைக்கு வருந்தினான்.

அரசன் தன் அரண்மனைக்குக் கொண்டு போய் ரணங் களை ஆற்றினான். ஜெயதேவர் அங்கிருக்கையில் -

போகிகள், பகவத் தாஸனிடம் நடந்தவைகளைத் தெரிவித்தார்கள். அவன் துடித்தான். ஜெயதேவர் இருப் பிடம் தெரியாமல் - தேடச்செய்து கொண்டிருந்தான்.

பத்மாவதிக்குச் சாத்துவிக மன்னன் பல்லக்கு அனுப்பி அழைத்து ஜெயதேவரைக்காட்ட அவள் துயரத்தில் மூழ்கி யிருந்தாள். ஜெயதேவரும் பத்மாவதியும் அங்கே இருந் தார்கள். அவர்களை அங்குள்ள ஜனங்கள் பூசித்தார்கள். அவர் புகழ் விரிந்தது.

இப்படி ஓர் மகாத்மா அங்குத் தங்கி இருப்பதால் நாமும் தரிசித்து நம் பாவத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்று நினைத்து ஐந்தாறு பேர் சாதுக்கள் வேடத்தோடு ஜெயதேவரிடம் வந்தார்கள். அரசனும் கூட இருக்கிறான். ஆனால் வந்தவர்கள் முன்பு ஜெயதேவரை இம்சித்த திருடர்கள். அவர்கள் ஜெய தேவரைக் கண்டதும் இவரா என்று நடுங்கினார்கள். ஆயினும் ஜெயதேவர் அவர்களை அரசனுக்குக் காட்டிக் கொடாமல், அவர்கள் சாதுக்கள் வேடந்தாங்கியது பற்றிச் சந்தோஷித்து அவர்கட்கு ஏற்ற உபசாரம் புரிவித்து - அவர்கள் கேட்டபடி, வண்டியில் ஆபரணம் ஏற்றி அனுப்பினார். வண்டி நகரைத் தாண்டி யதும், திருடர்கள் வண்டியை நிறுத்தச் சொல்லி -

அந்த அரசனது வண்டிக்காரனிடத்திலும் உடன்வந்த அரச சேவகரிடத்திலும் ஜெயதேவரைப் பற்றிக் குறை வாகக் கூறி - ஜெயதேவரைத் தாங்கள் படுத்திய இம் சைகளையும் கூறினார்கள்.

உடனே பூமி அதிர்ந்தது. நிலம் பிளந்தது. அந்தத் திருடர் பிளவில் வீழ்ந்து மாண்டார்கள்.

இத்தச் சேதி அரசனுக்கும் ஜெயதேவருக்கும் எட்ட அவர்கள் பிளவை வந்து பார்த்தார்கள். ஜெயதேவர் என்னால் இந்த மலிதர்கட்கு இந்தக் கதி வந்ததே என்று துக்கித்து மூர்ச்சையாகி விழுந்து பிணமானார். அரசின் பிராணத் தியாகம் பன்னிக்கொள்ள முயலுகையில்

பரமசிவன பிரத்யக்ஷமாகி,

ஜெயதேவரை விழிக்கச்செய்து அரசனுக்கும் அனுக்கிரகம் புரிந்து போகிறார்.

ஜெயதேவர் இல்லாத சமயம் அரசன் மனைவி ஜெய தேவர் மனைவியிடம் பேசியிருந்தாள். அச்சமயம் ஓர் தூதுவன் அரசியிடம், உமது சொந்தக்காரர் இறந்தார். அதனால் அவர் மனைவி உடன்கட்டை ஏறினாள் என்றான்.

கேட்ட அரசி திடுக்கிட்டாள். மேலும் அவள், உடன் கட்டை ஏறியவளைப் புகழ்ந்து பேசினாள். அது கேட்ட ஜெயதேவர் மனைவி, கணவன் இறந்தால் உடனே உயிர் விடுகிறவளே உத்தமி. கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறுகிறவள் மத்யமிதான் என்றாள். இதனால் இருவர்க்கும் மனம் வேறுபடுகிறது.

ஒருநாள் அரசியின் சூழ்ச்சியின் படி சிலர் வந்து ஜெய தேவர் இறந்தார் என்று பத்மாவதியிடம் கூற, உடனே பத்மாவதி ஆவி பிரிகிறது. அரசி துடித்தாள்.

அரசனும் ஜெயதேவரும் ரதத்தில் வருகிறார்கள். விதி யில் துர்க்குறி காணுகிறார்கள். அரண்மனை சென்று சேதி அறிகிறார்கள்.

அரசன் துடித்தான். ஜெயதேவர் வருந்தினார். அரசன் தன் மனைவியைக் கொல்லப் போகிறான். ஜெயதேவர் தடுக்கிறார். அரசி ஜெயதேவரை நோக்கி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள்,

ஜெயதேவர் மூர்ச்சையாகி விழ - அவர் கால் கை வளர்கின்றன. ஜெய தேவர் கடவுளைத் துதிக்க, பத்மா வதியைக் கடவுள் வந்து எழுப்புகிறார். கடவுள் ஆசி கூறி மறைந்தார்.

ஜெயதேவர் பாகவதத்தை வடமொழியில் பாடியரு ளினார் அரசன் முயற்சியால் அரங்கேற்றும் போது புதிய அந்தணர் ஒருவர் அங்கு வந்து, அநேக குதர்க்க வாதம் புரிந்து, பின் கண்ணனான தன் சொந்த உருவத்தோடு காட்சிதந்து நூலைப் புகழ்த்து ஆசிதந்து போனார்.

ஜெயதேவர் சிவபெருமானைக் குறித்து ஐந்து கீர்த்தனம் செய்தார். இப்படியிருக்க -

ஒருநாள் கணேச (பட்டர்) மகோபாத்யாயர் வந்து கீத கோவிந்தம் முதலியவைகளைச் சொல்லும்படி கேட்க, அதில் குற்றம் சொன்னார். அதற்கு அரசன் கோபித்து அவை குற்றமுடையது என்று எண்பித்தால் என் அரசை உமக்குத் தருகிறேன் என்று பந்தயம் கூற, உபாத்தியாயர் சம்மதித்துக் காசிச் சங்கத்திற்கு அழைத்துப் போனார்.

சங்கத்தின் தலைவரான சர்வக்ஞ பண்டிதர் நூலைப் பார்த்தார். சபையாரோடு கங்கைக் கரைக்குச் சென்று கங்கையைத் துதித்து நூலைக் கங்கையில் போட்டார் - காங்கா தேலி நூலை ஏந்தி எதிர்வந்து நின்று நூலின் மகத்துவத்தை விவரித்தாள்.

கங்கைக்கும் சர்வக்ஞர்க்கும் மனத்தாங்கல் ஏற்படு கிறது. கீத கோவிந்த ஏடுகளைச் சர்வக்ஞ வானில் எறி கிறார். அப்போது ஏடுகளை ஏந்திக் கண்ணபிரான் ப்ராப்தமாகி (ருக்மணி பாமா சகிதம்) காட்சியளித்துச் சந்தேகத்தை நீக்கி, அதே நேரத்தில் சர்வக்ஞ பண்டிதராய் இருந்த சிவபெருமானும் காட்சியளித்தார். மற்ற கணேசர், சுப்ரமணியர் காட்சியளித்தார்.

அதன் பிறகு ஜெயதேவர், அரசனுக்கும் தம் மனைவிக் கும் ஞானோபதேசம் செய்து முக்திப் பேறடைந்தார்.