விஞ்ஞானி
புறக்கட்டில் இருக்கும். அங்கே மதுரை நடுங்கிக் கொண்டிருக்கிறான். அடிமேல் அடிவைத்து அறைக் சுதவின் இடுக்கில் பார்ப்பதும், அவ்வாறே மீள்வதுமா யிருக்கிறான். பிறகு ஒருவாறு ஊக்கத்துடன் வெளிவந்து அங்கு எல்லா இடத்திலும் துருவிப்பார்த்து ஒருபுறம் அங்கேயே உட்காருகிறான். மீண்டும் ஆளன் கடிதத்தைப் படிக்கிறான். அவன் மனக்கண் முன் பாண்டியன், அங்கயற்கண்ணி, மங்கையர்கரசி, அறிவுடை நம்பி தோன்றி மறைகிறார்கள்.
மதுரை, தன் வீடு சென்று மனைவி, மகள் இருவரை யும், என் செய்தியை வெளியிற் சொல்லியதுண்டா ? எனக் கெதிராக முயற்சி செய்வதுண்டா? என்று கேட்கிறான். அவர்கள் இல்லே என்கிறார்கள். பின் யார் என்னைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்தினார்கள் என்று கேட்க, அவர்கள், நாங்கள் எதிர்ப்பாக எதுவும் செய்யவில்லை என்பதற்கு நீங்கள் இதுவரைக்கும் உயிரோடு இருப்பதே அத்தாட்சி என்று கூறுகிறார்கள்.
உடன் பிறந்தானைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் ஒழியாப் பழியை அடைந்தது கண்டும் நான் தந்தையைக் காட்டிக் கொடுத்து வாழ ஒப்புவேனா என்கிறாள்.
பாங்கில் அழகிய உடையுடன் எட்டி வேலை பார்க் கிறான். அங்கு, சராய், சிலிப்பர், ஷர்ட், முக்காட்டுடன் ஒருத்தி வந்து நிற்கிறாள். அவள் எட்டியின் அழகில் சொக்கி வைத்தகண் சிமிழ்க்காமல் வாய் பேசாமல் மகிழ்ச்சி யால் ஆழ்கிறாள். பின்பு அவள் எட்டியை அணுகி, முகமலரை வேறுபக்கம் திருப்பியபடி, நகைமேல் பணம் தேவை என்கிறாள். எட்டி வேறு பக்கமுள்ள ஆளைக் காட்டி, அவரிடம் கேட்கச் சொல்லுகிறான். அதற்கு, என் நிலையில் உள்ள பெண்களிடம் அவர்கள் நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்று கூறித் தன் விரலை அவன் எதிரில் வைக்கிறாள். அதில் விலையேறப் பெற்ற மோதிரம் ஒளி வீசுகிறது, பொன் விரலுக்கு விளக்குப் போட்டது போல
எட்டி மனம் விரல்களின் அழகில் குழம்புகிறது ......... மோதிரத்தைக் கழற்றித் தாருங்கள் என்கிறான். என் காதலருக்காகக் காத்திருக்கும் மோதிரம் அது. நானே கழற்றிடுவது சரியல்ல. நீங்களே கழற்றிக் கொள்ளுங்கள் என்கிறாள். அவன் தொடுகிறான். கழற்றிக் கொண்டு, எவ்வளவு வேண்டும் என்கிறான். ஆயிரம் ரூபாயும், அந்த மோதிரம் இருந்த இடத்திற்கு வேறொரு மோதிரமும் வேண்டும் என்கிறாள். அவன் அவள் முகத்தைக் காண முயலுகின்றான். அவளும் முகந்திருப்பி முத்து நகை முகிழ்க்கிறாள். அவன் சிரிக்கிறான். அவள் கெஞ்சுகிறாள். முகத்தால் - எட்டி தன் மோதிரத்தை அவள் விரலுக்கு இட்டு, எவருக்குங் காட்டேல் என்கிறான். தில்லைக்கண் முக்காட்டை நீக்கி முழுமுகச் செழுநிலா ஒளிசெயச் சிரித்து ஓடுகிறாள்.
சிறிது நேரத்தில் எட்டியும் தன் பழைய நடையுடன் தில்லையுடன் போகிறான்.
தில்லைக் கண்ணு வீட்டில், எட்டி தில்லைக் கண்ணால் பாராட்டப்படுகிறான். தன்னைக் கைவிடக் கூடாதென்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றாள். அவனையே கேட்கின்றாள், 'மதுரை தன்னை மணந்து கொள்ள திர்ப்பந்தம் செய்கிறான் நிராகரித்து விடவா என்று!
எட்டி, அப்படிச் செய்யாதே ஞாயப்படி அவன் கஷ்டம் வாங்கிய வகையில் 3 லட்சம் தரவேண்டிய திருப்பா தால் அதைப் பெறும் வரை நிராகரிக்காதே என்கிறான். அவன் கொலைகாரன் கொள்ளைக்காரன் அவனைக் காணுதற்கே கண் நாணுகிறது என்கிறாள். பொறுமை யுடன் எப்போதும் போல் நடந்து வா என்கிறான்.
அதே நேரத்தில் மதுரை அங்கு வந்து, என்னைச் சார்ந்த பல செய்திகள் வெளியான தற்கு நீ தானா காரணம் என்றும், நீதான் எனக்கு மொட்டைக் கடிதம் எழுதினாயா என்றும் பலவாறு கேள்வி கேட்க, அதற்குத் தில்லை நானில்லை என்று கூறி அக்கடிதத்தில் சொல்லிபடி நீவிர் நடந்து தான் இருக்கிறீர் என்றால் உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்கி றாள். அதையெல்லாம் தான் செய்ததேயில்லை என்று பலவாறு கூறி 15 ஆம் தேதி நாம் திருமண உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிறான்.
திருமணம் எப்போது என்கிறாள் எட்டி?
அடுத்த வாரம் ரிஜிஸ்டர் மணம் நடத்திக் கொள்ள லாம் என்று கூற, தில்லைக்குக் கண்காட்டி நல்லது என்கிறான். அவளும் கேட்கிறாள்.
கிரையப் பணத்தை எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்கிறாள்.
அதற்கு மதுரை பலர் முன் திருமண உறுதி கூறிவிடு! மறு நாள் பணங் கொடுத்து விடுகிறேன். திருமண உறுதி தெருவீட்டார்க்கு நடுவில் நடைபெற வேண்டுமென்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவதாகவும் சொல்லிப் போனான்.
பரங்கிமலைக் குகையில் விஞ்ஞானி நாய்ப் பிணத்தை அடைத்து வைத்த பெட்டியை எடுத்து பார்க்கிறான், திகைக்கிறான். நாயை எடுத்து அதற்கு மருந்து ஏற்றுகிறான். நாய் உயிர் பெற்று எழுந்திருக்கிறது. அதைத் தட்டிக் கொடுத்து அதற்கு உடனே பால் வைக்கிறான். இதை எதிரில் வரிசையாய்ப் பார்த்திருந்தவர்கள் அனை வரும் மகிழ்ச்சியால் ஆடுகிறார்கள்.
இன்ஸ்பெக்டர் மதுரையிடம் வந்து பேசுகிறான். மதுரை தனக்குப் பயமுறுத்தல் கடிதம் வந்திருப்பதாகக் கூறி, அதற்கு என்ன செய்யலாம் என்று கூற - அவன், அதெல்லாம் நான் தக்க ஏற்பாடு செய்கிறேன். நாமும் சில ரௌடிகளுக்குப் பணங்கொடுத்து, கையோடு வைத்துக் கொள்ள வேண்டும். மற்றப்படி போலீசும் கண்காணிப்பா யிருக்கும் என்கிறான்.
மேலும், மதுரை தனக்கும் தில்லைக் கண்ணுக்கும் 15-ல் திருமண உறுதி நடைபெறப் போவதாகவும் அதையும் உடனிருந்து நடத்த வேண்டும் என்று கூறி, உங்கள் நண்பர் முகவரியும் தேவை என்று தன் சட்டைப் பையி லிருந்து, தன் தினசரிக் குறிப்பை விரிக்க, 12 ஆம் தேதி ஆகிய தொரு பக்கத்தில், 15 ஆம் தேதி மாலை 7 க்கு உன் சாவு! திருமண உறுதி நடக்காது. அதற்குள் நான் சொன்னவைகளை நிறைவேற்றினால் தப்பிப்பாய்.
இங்ஙனம்
ஆளன்
இப்படி எழுதியிருந்த பக்கத்தை மதுரை இன்பெக்டரிடங் காட்ட அவன்,
திருமணவுறுதி டீ பார்ட்டி 10 பேரில் இருக்கட்டும். சுற்றிலும் ஆள் போட்டு விடுவோம். நானும் ஆயுதத் தோடு வந்திருக்கிறேன். விழா முடிந்ததும் ஆளனைப் பிடிக்க ஏற்பாடு செய்யலாம் என்கிறான்.
மதுரை, துப்பறியும் மாணிக்கம் இதில் சுறுசுறுப்புக் காட்டவில்லை என்று கூற இன்ஸ்பெக்டர் அவன் பயங் காளி என்று கூறிச் செல்லுகிறான்.
எட்டி வருகிறான். டைரியை அவனிடம் காட்டி மதுரை தன் அச்சத்தையும் வியப்பையும் வெளிப்படுத்து கிறான். எட்டி கண்ணீர் வடித்துக் கூறுவான்.
டீ பார்ட்டியில் கலந்து கொள்வார்க்கெல்லாம் முக மறையக் கறுப்புடை தருவோம். நீங்கள் உட்கார வேண்டிய இடத்தில் நம் ரௌடி ரத்தினத்தை உட்கார வைப்போம். நானும் கறுப்புடையுடன் பரிமாறுகிறேன். நம்மைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் ஆட்கள் இருக்கட்டும். இப்படிச் செய்தால் உங்கட்கு ஒரு தீமையும் வராது டைரியில் எழுதிய கள்ளன் கைவரிசையுடையவனாகவே இருக்க வேண்டும் என்று கூற, மதுரை அப்படியே செய்து விடு என்று மகிழ்ச்சியடைகிறான்.
மதுரையிடம் தில்லைக்கண் வந்து பேசியிருக்கிறாள். எட்டி செய்துள்ள ஏற்பாடுகளை மதுரை கூறி அஞ்சாதே என்கிறான்.
15 மாலை 6 மணி காட்டுகிறது பாங்கையடுத்துள்ள வீட்டின் கூடத்து மணிப்பொறி!
பலர் கம்புகளுடன் வந்து தம் சிலம்ப வரிசை காட்ட அவர்கள் கம்புடன் நிற்க வேண்டிய இடங்களைக் குறிப்பிடுகிறார் இன்ஸ்பெக்டர். அதாவது வீட்டின் புறத்தில்!
வீட்டின் வாயிலில் சிலர் நிறுத்தப்படுகிறார்கள்.
பின் இன்ஸ்பெக்டர் உட்பட ஓர் அறையில், பத்துப் பேர் முகமூடிக் கறுப்புடை போர்த்துக் கொண்டு மேசை யின் எதிரில் உள்ள நாற்காலிகளில் வரிசையாய் அமர்கின்றார்கள்
மதுரை இன்று எனக்கும் தில்லைக் கண்ணணுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தின் பொருட்டு உறுதி நடக்கப் போகிறது. உங்கள் முன்னிலையில் நான் என் உறுதியைக் கூறுகிறேன். நான் மனமார, தில்லைக் கண்ணை என் வாழ்க்கைத் துணையாக மணக்க உறுதி கூறுகிறேன்.
தில்லைக் கண், எழுந்திருக்கிறாள். நான் வாழ்க்கைத் துணையாக இவரை மணந்து கொள்வதாக உறுதி கூறுகிறேன்.
எட்டி : பேர் சொல்லவில்லை இன்ஸ் : மணவாளன் பெயரை மணப்பெண் சொல்லுவ தில்லை. இருவரும் மணந்து வாழ்க என்று வாழ்த்து கின்றேன்.
வாழ்க மணமக்கள்!
வாழ்க மண மக்கள்
மதுரை : ஒழிந்தான் என் பகைவன், அவன் போட்ட சபதம் ஒழிந்தது. முழுத் தோல்வியடைந்தான் ஆளன். என்று உட்கார எட்டி சிற்றுண்டி கொண்டு வருகி றான். அனைவரும் உண்ணுகிறார்கள்.
டீ கொண்டுவந்து வைக்கப்படுகிறது. அனைவரும் அருந்துகிறார்கள். மணிப்பொறியில் 7 1/2 அடிக்கிறது. டீ அருந்திய மதுரை சாய்கிறான்.
அனைவரும், மதுரையை ஆராய்கிறார்கள். அவன் இறந்து விட்டான், இன்ஸ்பெக்டர். இச்செய்தி வெளிக்குத் தெரிய வேண்டாம். மாரடைப்பால் இறந்ததாக உத்தரவு பெற்றுப் பிணத்தைப் புதைத்து விடுங்கள். ஏனெனில், இதைக் கிளறினால், அநேகத் தகவல்கள் வெளிப்பட்டு, அனைவர்க்கும் துன்பம் ஏற்படும் என்று கூறி, பிணத்தை எடுக்க உத்தரவும் தந்து போகிறான்.
அதே நேரத்தில், அழுது கொண்டே எட்டி, தில்லைக் கண்ணைக் கையுடன் அழைத்துக் கொண்டு வெளியிற் செல்கிறான். எதிரில் மங்கையும் அங்கயனும் அழுது கொண்டே வருகின்றார்கள்.
எட்டி, அழுது புரண்டு அனைவர்க்கும் அழைப்பு அனுப்ப வேண்டாம் என்று கூறுகிறான்.
போகிறான் தில்லைக் கண்ணுடன் அன்றிரவு பிணம் புதைக்கப் படுகிறது.
நள்ளிரவில் அப்பிணம் இரண்டுபேரால் தோண்டப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது காரில்!
விஞ்ஞானி அறையில் வார்க்கப்பட்ட பிணத்திற்கு மருந்து ஏற்றப் படவே உயிர் வருகிறது. அதே நிலையில் அங்குள்ள சிறையில் மதுரையை வளர்த்த அவன் சிறிது நேரத்தில் உயிர் பெற்று எழுகிறான்.
வாய் மூடி ஒருவன், அவனுக்குப் பால் சிற்றுணவு கொண்டு வைக்க மதுரை, அவைகளை ஆவலுடன் அருந்துகிறான். அவன், "நீங்கள் யார்?''- நான் எப்படி யாரால் இங்கு வந்தேன் - என்று கேட்க, வாய்மூடி தன் வாயை மூடிக் காட்டிச் செல்கிறான்.
மதுரை சிறையிலிருந்து தப்பியோட முயல்பவனாய் அங்குள்ள கம்பியை விலக்குகிறான்.
அதே நேரத்தில் எதிரிலுள்ள சுவரில் சிவப்பு ஒளி எழுத்தால் தப்பிப் போக முயல வேண்டாம் என்ற சொற்கள் காணப்படவே, உடனே, மதுரை அங்குள்ள கண்ணாடிப் பெட்டி ஒன்றைக் கைத்துண்டால் மறைக்க நேரும் போது கீழே பொருந்தியுள்ள பொறி ஒன்று அவனைத் தூக்கி எறிகிறது.
மதுரை, செயலற்று ஒருபுறம் உட்கார்ந்து விழிக்கிறான்.
அங்கயற்கண்ணி திருக்குறள் படித்துக் கொண் டிருக்கிறாள்.
எட்டியும் மங்கையர்க்கரசியும் ஒருபுறம் (சிறிது தொலைவில்) பேசியிருக்கிறார்கள். எட்டி, தில்லைக்கு உணவு கொண்டு போக வேண்டுமா என்று கேட்க, மங்கை யர்க்கரசி அம்மாவைக் கேட்கும்படி சொல்ல, அம்மாவைக் கேட்கிறான். அதற்கு அவள், எனக்கும் இந்தக் குடும்பத் துக்கும் இருக்கும் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் மதுரையின் மனைவி அல்லள் ஆதலால் என்கிறாள். எல்லாவற்றிற்கும் மங்கையர்க்கரசிதான் உரியவள் என்கிறாள்.
மங்கையர்க்கரசியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு, ஏனெம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள். பெற்ற தாய்க்கு மகள் தனக்கென ஒன்று உடையவள் அல்ல என்று அழுகிறாள்.
அப்பாவின் எண்ணம் போல் தில்லைக் கண்ணுக்கு வேளை தோறும் உணவு கொடுத்து வரவேண்டியது தான் என்கிறாள் மங்கையர்க்கரசி!
எட்டி, ஆனால் தில்லை நம்மிடத்தில் உணவை எதிர் பார்க்கவில்லை. தனக்குச் சேர வேண்டிய மூன்று லட்சத்தைத்தான் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது என்கிறான்
மங்கையர்க்கரசியும், அங்கையனும் விபரங் கேட்ட திலிருந்து, ஆளனின் கடிதம் - ஆளன் தான் மதுரையின் எதிரி என்பனவற்றை வெளியாக்குகிறான் எட்டி!
மங்கையர்க்கரசி ஆளன் மேல் ஆத்திரங் கொண்டு, அவன் எதிரில் வரக்கண்டால் பழிக்குப் பழி வாங்குவேன் என்று கூற, அங்கு ஆளன் தோன்றுகிறான். மங்கையர்க் கரசி நிராயுதபாணி! ஆளன் மங்கையர்க்கரசி வாக்குவாதம். நாளைக்கு உன் ஆட்களுடன் காத்திரு! உன்னை நேரில் வந்து காணுகிறேன். அப்போதாவது என்னைப் பழிக்குப் பழி வாங்கலாம் என்று கூறி மறைகிறான்.
மங்கையர்க்கரசி ஆட்களைச் சேகரித்து, வீட்டில் எங்கும் நிறுத்தி, அவனைப் பிடித்துக் கட்டி வைக்கச் சொல்லுகிறாள். அவள் மேல் மாடியில் எட்டி துணையுடன் இருந்து வருவதாக முடிவு கூறுகிறாள்.
அங்கயற் கண்ணிக்கு இந்த ஏற்பாடெல்லாம் பிடிக்க வில்லை. ஆளன் அறத்தொண்டன் என்று வாதிக்கிறாள். அவன் சொன்னபடி, சொத்தை அவரவர்களிடம் சேர்த்து விடுவதே மேல் என்று கூறுகிறாள். மகள் அவ ரவர்களிடம் சொத்தைச் சேர்த்து விட அட்டியில்லை ஆயினும் என் தந்தையைக் கொன்றவனைக் கொல்லுவேன் என்கிறாள், அங்கயற்கண்ணி திருக்குறளுடன் வெளியிற் சென்று விடுகிறாள். அதே நேரத்தில் பழமலைக் கிழவர் பாங்கு ரசீதுகளில் மங்கையர்க்கரசியின் கையொப்பம் பெற்றுப் போகிறார். அதேநேரத்தில் எட்டி வந்து கொல்லையில் எருமை மாட்டைக் காணோம் என்கிறான். வீட்டு வாயிலிலும் உட்புறத்திலும் ஆயுதங்களுடன் ஆட்கள் காத்திருக்கிறார்கள்.
ஆளன் தன் விஞ்ஞானி ஆராய்ச்சி இல்லத்தை விட்டுப் புறப்படுகிறான். வாய்த்திரையுடைய ஒருவன், ஒரு ரிவால் வாரை நீட்டி இதை எடுத்துப் போக என்று கைகாட்ட, ஆளன் தன் நடு நெற்றியைக் காட்டி விட்டுப் போய் விடுகிறான்.
ஓர் எருமை மாட்டின் மேல் கறுப்புடை போர்த்த ஓர் உருவம் வருவதை ஆட்கள் கண்டு அஞ்சி வீட்டுக்குள் ஓடு கிறார்கள். எருமை வீட்டில் நுழைகிறது. அதே நேரத்தில் பழமலையும் வீட்டில் நுழைகிறார்.
வீட்டின் தோட்டத்திற் சென்ற எமனை ஆட்கள் நெருங்க அஞ்சுகிறார்கள் .
அதே நேரத்தில் மாடியிலிருந்த எட்டி, மங்கையர்க் கரசியின் எதிரில் ஆளன் தோன்றி பழிக்குப்பழி வாங்கு என்கிறான்.
அவள் சினத்தொடு பேசுகிறாள். கடைசியில், ஆளன் ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்துப் படி என்ன, அவள் படித்து மயங்கி விழுகிறாள். அவளை ஆளனும் எட்டியும் தூக்கித் தெருவில் எறிகிறார்கள். எறியப்பட்ட மங்கையர்க்கரசி தெருவில் ஆட்களால் விரித்துப் பிடிக்கப்பட்டிருக்கும் வலையில் விழுகிறாள்.
ஆட்கள் மங்கையர்க்கரசியைக் காரில் தூக்கிச் செல்லு கிறார்கள்.
கொல்லையில் எருமைமேல் குச்சுக்களால் ஆன கறுப்புடை உருவத்தைக் கண்டு நாணிச் செல்லுகிறார்கள்,
மாணிக்கம் வருகிறான். நடந்ததை எட்டியால் அறிந்து, ஆளனைப் புகழ்கின்றான்.
தெருவில், ஒலி பெருக்கி கேட்கிறது :- மாலை மயிலைக் குளக்கரைச் சத்திரத்தில், அங்கையற்கண்ணி, " இருக்க வேண்டுமா?" என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தப் போவதறிந்த எட்டி, மாணிக்கம், அங்கு புறப் படுகிறார்கள்.
சொற்பொழிவு நடக்கிறது. மாணிக்கம், எட்டி, பழமலை மூவரும் கேட்கிறார்கள்; முடிகிறது.
அங்கயற்கண்ணியைக் கண்டு நடந்தவற்றைக் கூறு கிறார்கள் .
மாணிக்கம், எட்டி, பழமலை, அங்கயற்கண்ணி நால்வரும் மங்கையர்க்கரசியைத் தேடிச் செல்லுகிறார்கள்.
எட்டி, மலைக் குகைக்குள் அழைத்துச் செல்லுகிறான்.
குகைக்குள் புக மறுக்கிறார்கள். எட்டி, 'குகைக்குள் எல்லாம் உண்டு மங்கையர்க்கரசியிருக்கிறார்கள். நோய் தீர்க்க வல்லது! இம்மலையுள் புகுந்ததும் ஊமையும் பேசுவான்' என்கிறான்.
ஊமையாகிய பழமலை, வாருங்கள் போவோம் உள்ளே என்று சைகை காட்ட, அனைவரும் நுழைகிறார்கள்.
ஊமையாகிய பழமலைப் பேசத் தொடங்குகிறார்.
மாணிக்கம் வியப்புறுகிறான். குகை பேச வைத்தால், காடு பாடவைக்கும் கடல் ஆடவைக்கும் போலும் என்று இகழ்ச்சி பேசுகின்றாள்.
உள்ளே, கட்டடத்தின் எதிரில் - வெட்ட வெளி-- முகத்திரை உடையவன் விசிப்பலகையும் நாற்காலியும் கொண்டு வந்து போடுகிறான். நாற்காலியில் பழமலை உட்கார்ந்து பேச்சைத் துவக்குமுன் மற்றும் பலர் கறுப்புடை முகத்திரையுடன் கூடி வந்துட்கார, வைக்கப் படுகிறார்கள்.
1. பழமலை, துரையை முத்தும் வீராசாமியும் பாண்டியனாரும் கிணற்றில் போட்டுவிட்டது வருந்தத் தக்கது என்று கூற மூவரும் தத்தம் உருக்காட்டி காரணங் கூறுகிறார்கள். பழமலை, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பதால் அவ்வாறு செய்திருக்கலாகாது என்று தீர்ப்புக் கூறுகிறான்.
மாணிக்கத்திற்கும், அங்கயற் கண்ணிக்கும் பழமலை பாண்டியனார் முதலியவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
2. தில்லைக் கண் மதுரையை மணந்து கொள்வதாக ஆசைப் பேச்சுப் பேசியது வருந்தத் தக்கது என்கிறார்.
தில்லைக் கண் தன் உருவுடன் தோன்றி, காரணம் கூற,
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பதறிவு
என்று முடிக்கிறார். தில்லைக் கண் மற்றவர்க்கு அறிமுகப் படுத்தப் படுகிறாள்.
3. பெற்றதாய், ஆளன் அறத்தொண்டன் என்கிறார் கள். அதன் பொருட்டு மங்கையர்க்கரசியார் தாயையே வெறுத்தார்கள். தாய் வெளியிற் செல்வதையும், ஒத்துக் கொண்டார்கள். ஆளன் சொல்லியபடி இன்னும், அவரவர் களிடம் சொத்தை ஒப்படைக்கவில்லை.
மங்கை தோன்றி, காரணங்கூறுகையில் தந்தையைக் கொன்ற ஆளளைக் கொல்ல வேண்டும் என்கிறாள்.
"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு" என்று கூறி முடிக்கிறார். பழமலை.
4. அங்கயற்கண்ணியம்மையார் தமக்கும் மதுரைக்கு மிருந்த திருமணத் தொடர்பை அறுத்துக் கொண்டது, மதுரை வேறு ஒரு மங்கையை நாட இடங்கொடுத்தது.
மேலும் அவர்கள் தம் கணவரைத் தீவழியிற் செல் லாது காத்திருக்கலாம் என்கிறார் பழமலை.
அதற்குக் காரணம் கூறுகிறார் பழமலை.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்',
என்று கூறி முடிக்கிறார்.
5. மாணிக்கம், மதுரை சாவுக்குக் காரணமாக விருந்த ஆளனைப் பிடிக்க என்னால் முடியாது என்று கூறியிருக்க வேண்டும்! அப்படி அவர் செய்யாதது குற்றம்.
மாணிக்கம், காரணம் கூறுகையில், கொலையும் கொள்ளையும் செய்து வந்த மதுரையைப் பிடிக்க முடியாத வகையில் அரசியல் நிலை இருந்து வருகிறது. யாராலும் பிடிக்க முடியாது என்று கூறி ஆளனை யாசிக்கிறான்.
6. தானே மங்கையர்க்கரசி பேச்சைத் தொடங்குகிறாள்.
குற்றங்கள் செய்த மதுரையை ஆளன் மன்னிக்க வேண்டாமா? கொன்று விடலாமா? இன்னா செய்தார்க் கும் இனியவே செய்ய அவருக்கேன் தோன்றவில்லை. கொலை செய்ய ஆளனுக்கு என்ன அதிகாரம்? ஆதலால் ஆளனைக் கொலை செய்ய வேண்டும் என்கிறாள்.
பிறரிடம் வஞ்சித்த பொருள் இன்னின்ன என்று கூறி அவைகளை அவரவரிடம் சேர்க்க முயன்ற ஆளனுக்கு நன்றி கூற வேண்டாமா என்று மாணிக்கம் கேட்கிறான்.
பொது நலத்தில் நாட்டமுடைய ஆளனை வரவேற் கின்றேன். கொலை செய்த ஆளனைத்தான் கொல்ல நினைக்கிறேன் என்கிறாள்.
பழமலை :-ஆம். அக்கொலைக் குற்றத்தைச் செய்யா திருந்தால் ஆளனை ஆதரிப்பதில் மங்கை பின்னிட மாட் டாள். ஆளன் கொலை செய்தது மெய்தானா? மதுரை இறந்தது மெய்தானா? -
அங்கயற்கண்ணி: கொலைக்கும் காரணமாகாவிடில் ஆளன் போல் ஒருவர் கிடைப்பது அரிதே.
மங்கை :-- ஆம், அவன் கண்ணைக் கவரும் கட்டழகன், ஆனால் கருத்தை வெறுக்க வைக்கும் கொலைகாரன. அவனைப் பிடிக்க வேண்டும். அவன் யார்? -ஆராய வேண்டும்,
பழமலை: ஆளன் ஆருமில்லை. பாண்டியனார் மகனே! அவன் இங்கிலாந்தில் எட்டியுடன் விஞ்ஞானம் படித்திருந்தான். அவனுக்குத் தந்தையார் சென்னை மங்கையர்க்கரசியின் உருவப் படத்தை அனுப்பியிருந்தார். அவன் அவள் மேல் ஆராக் காதல் கொண்டு - அவளைப் பார்க்கச் சென்னைக் குக் கிளம்பினான். இன்னும் தேர்வில் தேறவில்லை. 6 மாதங்கள் இங்கிலாந்தில்தான் தங்க வேண்டும் என்று டர்பனிலிருந்த தந்தைக்குப் பொய் கூறினான். இருபது லட்சம் தந்தையனுப்ப அதையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
சென்னைக்கு - ஆளன் எட்டியுடன் வந்து சேர்ந்த வுடன் அவன் கேள்விப்பட்டான் மங்கை-செழியன் திருமணத்தை! அவன் கேள்விப்பட்டான் செழியன் கொல்லப் பட்டதை! மதுரையிடம் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறிய எட்டி சமையற்காரனாய் அமர்ந்தான். அது போலவே ஆளனும், மதுரையிடம் செயலாளன் பழமலையாய் அமர்ந்தான் - என்றான்.
மறைவிடம் ஓடி, செயலாளன் வேஷத்தைக் கலைத்த ஆளனைக் கண்டு வியப்புறுகிறார் அனைவரும் அப்படியே!
மங்கை பதறுகிறாள் ஆளனை நோக்கி! அங்கயல் (தடுத்து பாண்டியனார் மகன் அழகிய மணவாளன் அல்லவா?
ஆளன் : ஆம்! நான் காதலில் மங்கையால் விலக்கப்பட்டேன்! எனக்கு அழகு போயிற்று. மணத்தை வெறுத்தேன். மணம் போயிற்று. மீதி ஆளன்!
மங்கை : நான் என் தந்தையைக் கொலை செய்தவனை மணந்து கொள்ளாதது சரியே! அவனை நான் வெறுப்பதும் சரியே! அவன் என் எதிரில் ஆண் மகன் போல் உயிர் வாழ்வது தான் வியப்பு! மறைந்து இருந்து வாலியைக் கொலை செய்த ராமனையே வெறுக்கும் இந்நாடு இந்த மாபா வியை விட்டு வைத்திருப்பது வெட்கக்கேடு.
ஆளன் : இருக்கலாம். பிறரிடம் அபகரித்த பணத்தைக் கொடாத நீ வாழ்வது மட்டும் நீதி போலும்!
மங்கை : சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை உயிரைத் திருப்பித்தர முடியுமா? கொன்றவன் நீ இதற்கு மான உணர்ச்சியுடன் விடை கூற வேண்டும். என் தந்தை உயிரைக் கொடா விட்டால், உன் உயிரைக் கொடுக்க வேண்டும்.
இன்னா செய்தாருக்கும் இனியவே செய்ய வேண்டும் என்றாயே. இன்னா செய்த என் தந்தைக்குக் கொலையை அன்றே பரிசளித்தாய்.
ஆளன் புன் சிரிப்புடன் எழுந்து போகிறான். அங்கே முகமூடியுடன் ஒருவன் வருகிறான். தன் முக் மூடியை நீக்கி மதுரையாகக் காட்சியளிக்கிறான். அனைவரும் வியப்புறுகின்றார்கள். அப்பா என்று ஓடித் தழுவிக் கொள்கிறாள் மங்கை!
மதுரை தன்னை ஆளன் கொணரு வந்த வகையைக் கூறித் தான் செய்த தீச் செயல்களுக்கு வருந்துகிறான்.
அவரவர் பணத்தை அவரவரிடம் சேர்த்து விடும்படி கூற -
தில்லை, அறிவுடை நம்பி, வீராசாமி, முத்து பாண் டியனார் அனைவரும் தமக்குச் சேரவேண்டிய பணத்தை ஆளளிடமே கொடுத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.
மங்கை தனக்குடையானாகிய செழியனின் பத்து லட்சம் தனக்கே உரிமையுடையது ஆதலால், அதையும் ஆளனுக்கே தருகிறாள்.
ஒருபுறம்:--
மங்கை தனியே இருக்கிறாள். தில்லைக் கண்ணும் அங்கயற்கண்ணியும் அவளிடம் கூறுகிறார்கள்.
அழகிய மணவளான் உன்னிடம் ஒரு ரிவால்வரும், பூவும் பொட்டும் தருவார். அவரை மணப்பதாகப் பூவும் பொட்டும் எடுத்துக்கொள். உன் தந்தையை அவர் செய்ததற்கு - விரும்பினால் அவரைக் கொல்ல ரிவால் வரை எடுத்துக்கொள் என்கிறார்கள்.
அவள் - என் தந்தைக்கு அவர் நன்மை செய்தார் என்கிறாள்.
தில்லை மங்கைக்குத் தலைப் பின்னுகிறாள்.
தனியே இருந்த மங்கைக்கு - அழகிய மணவாளன் மலர் சூட்டிப் பொட்டிட்டு முத்தம் இடுகிறான்.
தனியே இருந்த அங்கயங்கண்ணியிடம் திருக்குறளை யும், தன் மாலையையும் மதுரை தர - அவள் திருக் குறளை எடுத்துக் கொண்டு,
'இல்லத் துறவு வேண்டும்
எல்லார்க்கும் தொண்டு செய்ய வேண்டும்' என்கிறாள்.
தனியே இருந்த தில்லையிடம் மாலையுடன் வருகிறான் எட்டி.
அவள் - எல்லார் முன்னிலையிலும் நம் திருமணத்தை நீ ஏன் தெரிவிக்க வில்லை என்று கேட்கிறாள்.
எனக்கு வெட்கமாய் இருந்தது என்று கோணங்கி யாடுகிறான்.
அவள் மாலையைப் போடுவது தானே என்கிறாள்.
எனக்கு எனனமோ போல இருக்கிறது என்கிறான்.
தில்லை மாலை சூட்டுகிறாள்; எட்டி மாலை சூட்டு கிறான் தில்லைக்கு. -
அனைவருடனும் - நின்று அழகிய மணவாளன்.
விஞ்ஞானம் வளர்க!
குறள் நெறி ஓங்குக!
எல்லா நிதியும் தமிழ் வளர்ச்சிக்கே!
எம் வாழ்வு தமிழ்த் தொண்டுக்கே!

