குமரகுருபரர்

280 வருடங்களுக்கு முன் கைலாசபுரத்தில் ஷண்முக சிகாமணிக் கவிராயர் - அவர் மனைவி சிவகாம சுந்தரி இருந்தார்கள். அவர்கள் பிள்ளை 5 வயதாகியும் ஊமை.

1. சிதம்பர வைத்தியர் வருகிறார். குழந்தையைப் பரிசோதிக்கிறார். மனிதரால் தீர்க்கப்படும் நோயல்ல என்று கைவிடுகிறார். கவிராயர், இப்பிள்ளையைக் கொண்டு சென்று செந்தூர் முருகனை வேண்டுகிறேன் என்று தெரிவிக்கின்றார். வைத்தியர், அவர்களால் பிறந்த பிள்ளையின் ஊமைத் தன்மையைத் தீர்ப்பது அவரால் தான் முடியும் என்று போகிறார்.

2. கவிராயரும், மனைவி சிவகாமசுந்தரியும் மாட்டு வண்டியில் ஏறிச் செந்தூரானைத் துதிபாடிச் செந்தூர் சேருகின்றனர்.

3. திருச்செந்தூர்க் கோயில் சுவாமி எதிரில் பிள்ளை யைக் கிடத்தி ஒரு மண்டலத்தில் (40 நாளில்) இப்பிள்ளை யின் ஊமைத்தன்மையை நீர் நீக்கி யருளாதொழியின், அதன் மேல் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று சபதம் செய்து, பணிந்து, பிள்ளையுடனும், மனைவி யுடனும் சண் முக விலாசத்தில் தங்குகிறார்.

4. 39 நாட்கள் ஆகின்றன. தன் மனைவியிடம் நாளை சாவது நிச்சயம். நான் மண்ணில் வாழ்வது முருகனுக்குப் பிடிக்கவில்லை என்று அழுது புலம்ப அவளும் புலம்புகிறாள்.

5. 40 ஆம் நாள் முருகனைத் துதித்து நித்திரை செய்கிறார்கள்.

6. கைலாசத்தில் பார்வதி எதிரில் பாலசுப்பிரமணியன் கையில் வேல் தூக்சி நர்த்தனம் புரிய, அவன் வாகனமாகிய மயிலும் ஆடுகிறது. பார்வதி களிப்புடன் பார்த்திருக் கிறாள். பாலமுருகனின் மனக்கண்ணில் ஊமைப்பையன் நித்திரைப்புரிவதும், தந்தை தயார் நித்திரை புரிவதும் தோன்றவே பூலோக நோக்கி ஆடியபடி செல்ல, மயிலும் ஆடியபடி தொடர்கின்றது. பார்வதி இது தெரிந்து பிள்ளையை ஆசீர்வதித்து மறைகிறார்.

7. பாலசுப்பிரமணியன் 'குருபரா' என்று தட்டி எழுப்பி நாவில் கடாச்சியத்தை வார்த்து நமது விஸ்வரூப தரிசனத்துக்கு விரைவில் வருக என்று மறைகிறான்.

8. குருபரன் அப்போதே தன் தாய் தந்தையரை அணுகி, 'அம்மே' 'அப்பா' என வாய் திறந்து கதறித் துயில் எழுப்ப, அவர் எழுந்து அதிசயித்தார். நடந்தவை கூறுகிறான், குருபரன். நித்திரை.

9. மறுநாள் திருச்செந்தூர் விசுரூப தரிசனம் செய்து கந்தர் கலிவெண்பாவால் துதிக்கிறான் குமரகுருபரன். அது கேட்ட அனைவரும் (அங்கிருந்தவர்) அதிசயித்து வணங்குகிறார்கள்

10. வீட்டில் தாய் தந்தை பிள்ளை சம்பாஷணை. ஞானாசிரியனை அடைய ஆவல் ஏற்படுகிறது என்கிறான் குருபரன். தாய் தந்தையர் வருத்துகிறார்கள். ' என் ஆசை அனைத்தும் முருகன் கட்டளையே,' என்கிறான் குருபரன். அவன் விழிகள் மூடுகின்றன. அவன் நா முருகனைப் பாடுகிறது.

அசரீரி! நீ உத்தர யாத்திரை செய்யுங்கால் உனக்கு எவன் முன் வாக்குத் தடைபடுகிறதோ அவனே உன் ஞான சிரியன் என்று அறிக!

11. பெற்றோர் வருந்த, அவர்களைத் தேற்றித் தன் தம்பி குமார கவியுடன் மதுரைக்கு கிளம்புகிறான். பரன் +

12. வழியில் குமரகுருபரன் பாடிக்கொண்டே போகக் குமாரகவி அவைகளை ஏட்டில் குறித்துக்கொண்டே போதல்.

13. கைலாசத்தில் பார்வதி பரமசிவன் சம்பாஷணை. அச்சமயம் இருவர் மீதும் குமரகுருபரன் பூலோகத்தில் பாடும் பாட்டின் ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு மலராக வீழ்கிறது. பார்வதி தன்னைக் குறித்துக் குமரகுருபரன் பாடும் பாட்டுக்கள் இவை என, அப்பாடல் சேர்ந்த பிள்ளைத்தமிழை மதுரையில் அரங்கேற்றும்படியும் குமரகுருபரன் பெருமையை மதுரைமன்னன் அறியும்படி யும் அறிவித்து வருவதாகப் பரமசிவனிடம் விடை பெறுகிறாள் பார்வதி.

14. திருமலை நாயக்கன் நித்திரை செய்கிறான். மீனாக்ஷி கனவில் தோன்றி குமரகுருபரன் வருகையையும் அவன் இயற்றிய பிள்ளைத் தமிழையும், அதை அரங் கேற்ற அவனை எதிர் கொண்டழைக்க வேண்டியதையும் உரைத்து மறைகிறாள்.

15. திருமலை நாய்க்கன் ஆசனத்தில் இருக்க, பரி ஜனங்களும் புலவர்களும் பிரதானிகளும் அமர்ந்திருக்க, குமரகுருபரன் மீனாக்ஷியம்மன் பிள்ளைத் தமிழ் ஆரம்பிக்கிறான். அச்சமயம் சிவவேடந்தாங்கிய கந்தர்வச் சிறுவன் ஒருவன் அங்குள்ள சிலரை இங்கென்ன விசேஷம் என்ன - அவர்கள் பிள்ளைத்தமிழின் விசேஷத்தையும் ஆக்கியோன் வரப்பிரசாதம் பெற்றதையும் கூறுகிறார்கள்.

16. கந்தர் வன் தான் மாத்திரம் அதைக்கேட்கும் பேறு பெறுவது போதாது; கந்தர்வ லோகம் அவ்வின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து நிற்க, அவன் ஆடை பூவாடையாகவும் உடல் பொன்னுடலாகவும் அங்கங்கள் நவரத்ந சகிதமாகவும் மாறுகின்றன. முதுகின் புறத்தின் வெண் சிறகு தளிர்த்துப் பறக்க ஆயத்தமாகிறது. கந்தர்வன் பறந்து போகிறான்.

17. 'உலகில் கவிதை பிறக்கிறது. இசை உன்னக நிலையடைகிறது.' எனக் கந்தர்வ ராஜாவிடம் முறை யிடுகிறான் மகிழ்ச்சியோடு.

18. பளிங்கு மாடங்கள் மரகதத் தழையால் ஆகிய மரங்கள் கொடிகள் விதவிதமானப் பூக்கள் நிறைந்த கந்தர்வ லோகத்தில் 16 வயது பிராயத்தாராகிய கந்தர்வ மாதர்களும் ஆடவரும் ரத்நாபரணங்கள் கவசங்கள் முடிகள் புஷ்பலதாம்பரங்கள் (புஷ்பத்தாலும் இலைகளா லும் ஆகிய உடைகள்) துலங்க - கவிதைரசம் அருந்த ஆயத்தப்படுகிறார்கள்.

19. திருமலை நாயக்கன் அரங்கேற்றந் தொடங்க அனுமதியளிக்கிறான். அதே சமயம் கோயிலின் அர்ச்சகன் மகள் (சிறுபெண்) காலின் சதங்கை ஒலிக்கக் கூட்டத்தின் நடுவில் ஓடி வருகிறாள். அவள் நேரே ஓடிவந்து அரசன் மடியில் உட்கார அவன் மடியில் தாங்கிக் கொள்கிறான்.

20 குமரகுருபரன் -

தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!

நறை பழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகும் நறுஞ்சுவையே!

அகந்தைக் கிழங்கை அகழ்ந் தெடுக்கும்,

தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே!

வளர்சிமய இமயப் பொருப்பில்

விளையாடும் இளமென் பிடியே!

எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற

ஒருவன் திருவுள்ளத்தில்

அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்

உயிர் ஓவியமே!

மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடேந்தும்

இளவஞ்சிக் கொடியே வருகவே!

மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே

வருக வருகவே!

என்று பாட அதே நேரத்தில் கந்தர்வ லோகத்தில் இப் பாடலின் கருத்துத் தோன்ற அபிநயம் காட்டி ஆடுகிறார்கள்.

அதே நேரத்தில் தேவர்கள் கூடிப் புஷ்ப வருஷம் புரிகிறார்கள்.

21. சிறுமி பாடலுக்குத் தக்கபடி சிரக்கம்பம் செய்து கனித்தலை அனைவரும் கவனிக்கிறார்கள். திருமலை நாயக்கன் உனக்குப் பொருள் தெரிந்ததா? எனச் சிறுமியை நோக்கி வினவும் சமயம் சிறுமி மறைதல். அனை வரும் 'அவள்' என்று வணங்கி நிற்றல்.

22. அரசன் குமர குருபரனைச் சிங்காசனத்தில் அமைத்துப் பாதத்தில் வீழ்ந்து யானை, குதிரை, சிவிகை குடை, கொடி, சாமரம்.-பொற்குவியல் காணிக்கையாகக் கொடுத்தல்.

23. திருமலை நாய்க்கன் மாளிகையில் குமரகுருபரன் குமாரகவி சாப்பாட்டுக்கெனக் காத்திருக்க, அரசன் தன் பிரதானிகள், புலவர்கள் இடத்து. குமரகுருபரன் இயற்றி யருளிய மீனாட்சியம்மை குறம், இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் இவைகளின் மேன்மையைச் சொல்லி யருள நாழிகையாகிறது.

அரசன் அதன் பிறகு குமர குருபரனை உணவுக் கழைக்க, குமரகுருபரன்.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்த லரிது''

என்ற குறட்பாவைச் சுவரில் எழுதுகிறான். அதன் பொருளை அரசன் வினாவ விடை கூறுகிறான் குமர குருபரன். அதனால் அப்படிப்பட்ட நீதி நூல் வேண்டும் என்று அரசன் கேட்ப, ஆகட்டும் என உணவுக்குப் போதல்.

24. தம்பியாகிய குமாரகவியை நீர் இல்லறத்தை மேற்கொள்வாயாக என்று கைலாசபுரத்திற்கு அனுப்ப, குமாரகவி வருத்தத்தோடு சம்மதிக்கிறார்.

25. குமாரகவி திருமலை நாயக்கனைக் கண்டு விடை கேட்க, அவர் விடை நல்கக் குமரகுருபரனும் யாத்திரை போதல் அறிந்து வருந்துகிறான், குமாரகவி விடை பெற்றுப் போதல்,

26. திருமலை நாயக்கன் (அரசன்) குமரகுருவின் பிரிவு ஆற்றாதவனாய்ப் பரிவாரங்களுடன் வழியனுப்பி வருகிறான்.

27. குமரகுரு தனக்குக் கிடைத்த விருந்துகளுடன். சோழநாட்டில் திருச்சிராப்பள்ளியில் சுவாமிதரிசனம்.

28. திருவானைக்காவில் சுவாமி தரிசனம்.

29. திருவாரூர் சென்று சுவாமிமேல் திருவாரூர் நான்மணிமாலை பாடியருளுதல்.

30. தருமபுரம் திருக்கைலாய பரம்பனாகிய நான்கா வது குருமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீமாசிலாமணி தேசிகர் - தம் சிஷ்யர் ஆகி - தம் காட்சி யாளிகளின் குரு பரன் அவர்களை பணிந்து எதிர் இருக்க, தேசிகர் -

ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள

அளப்பரும் கரணங்கள் நான்கும்

சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்

திருந்து சாத் துவிகமே யாக

இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த

எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தோர்

என்னும் திருவிருத்தத்தின் அனுபவப் பயனை வினவ,

குமரகுருபரனுக்கு வாக்குத் தடைப்படுகிறது. குரு பரன் நீவிரே அடியேனுக்கு ஞானகுரு என்று பணித்திருந்தார்.

குரு நீ சிதம்பரம் சென்று வா எனப் பணிக்க. அவ் வாறே புறப்படுதல்.

31. புள்ளிருக்கும் வேளூரைத் தரிசித்துப் போகும் வழியில் முத்துக் குமாரசுவாமி (ஸ்தல மூர்த்தி) ஓர் சைவப் பெரியார் வடிவத்தோடு எதிர்த் தோன்றிய அளவில் குருபரன் யார் என வினவ. வம்பு பேசித் தம்மைக் குறித்து ஓர் பிள்ளைத்தமிழ் பாடென்ன, நீர் யார்? என முருகர் மறைந்தருவிகிறார். பொன்பூத்த குடுமி என ஆரம்பித்து முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடுகிறார்.

32. சிதம்பர தரிசனத்துக்குச் சென்று சிதம்பர மும் மணிக் கோவை பாடித் திரும்புகையில் ஓர் கல்விமான் வித்துவான் குருபரனுக்கு மரியாதை செய்யாதிருக்கச் சிலர் கேள்விப்படுகிறார்கள். அதற்கு அந்தப் புலவன் குருபரன் வரகவிதானே. கவியுள்ளம் தெரியாது என இது கேட்டுக் குருபரன் சிதம்பரச் செய்யுட் கோவை செய்து அவனுக்கு அனுப்புகிறான்.

33. சைவாச்சாரிகள் மகிழ சிவகாமி இரட்டை மணி மாலை செய்து சொல்லிக்காட்ட, அனைவரும் மகிழ்ந்து போற்றுகிறார்கள். கர்வியாகிய புலவனும் தனது அபசாரம் பொறுத்தருள்க எனப் பணிகிறாள்.

34. தருமபுரத்தில் ஞானசிரியனைப் பற்றிப் பண்டார மும்மணிக்கோவை பாடி, அதைக் குருவின் எதிர்பாடியளிக்க அவர், 'நீ இயல்பாகவே துறவி யாயினும் முறைப்படி காஷாயம் தரிக்க' என்று கூறிக் காஷாயம் தரிப்பிக்கிறார். குருபரன் தான் பெற்ற விருதுகள் திரு வினங்கள் அனைத்தையும் குருவின் பாதத்தில் வைக்க,

இவைகளைக் கொண்டு போய்க் காசியில் தருமம் செய்க என்று ஒட்டகத்தில் ஏற்றிக் குமரருருபரரை அனுப்புகிறார்.

35. கங்கைக் கரையில் நின்று பார்க்க, காடு தவிர வேறென்றையும் காணாமையால் காட்டைத் திருத்தி விசுவநாதரைத் தரிசித்தல்

36. விசுவநாதரைத் தரிசித்து காசிக் கலம்பகத்தை இயற்றல்.

37. ஓர் சிற்றூரில் தங்கி டில்லி நிலை. அதன் பாதுஷா வின் ஆட்சி இவைகளைத் தெரிந்து கொண்டு, கோயில் கட்ட பாட்சாவைக் காண நிச்சயிக்கிறார் இந்துஸ்தானி கற்க நினைக்கிறார். அந்த துர்ப்பாஷையானது தமிழர்க்கு உச்சரிக்க வருவது சிரமம் ஆன தால் வாணிதனைத் துதித்து நிற்கிறான். வாணி அருள் புரிந்தார்.

38. பாதுஷாவின் தர்பார் செல்ல, அவன் மரியாதை செய்யாதிருக்கிறான். காரணம் கேட்க கேவலம் உரு வத்தைக் கண்ட மாத்திரத்தில் மனிதன் மதிப்பது சரியல்ல என்னத் திரும்புகிறான் குருபரன்.

39. பாதுஷாவின் தர்பாரில் குருபரனைப்பற்றி உயர்த் தியும் தாழ்த்தியும் பேச்சு நடக்கிறது. அவரை மரியாதை செய்யாது அனுப்பியது பிழையென்று பாதுஷா உணருகிறான்.

40. அதே சமயம் குருபரன் உண்மையான சிங்கம் தனக்குத் தேவை என்று காளியைத் தோத்தினார். சிங்கம் ஒன்று வருகிறது. அதன் மேல் ஏறித் தர்பார் செல்லல். மரியாதை நடக்கிறது. வீரம் என்பது என்ன? என்ற கேள்விக்கு உத்தரங்கூறிய குருபரனை நோக்கி, பாக்ஷா சிற்றின்பத்தைப் பற்றி விவரித்துச் சொல்லென அவன் அவ்வாறே விவரிக்கிறான். அவர் அவ் வாறே விவரிக்க தர்பாரில் சேருவோன் (தர் பாரில் புலவன்), நீ இயல்பாகவே' துறவியாயின் இச்சிற்றின்ப அனுபவம் எப்படி வந்தது, என்ன, குருபரன் உடனே ஒரு பித்தளைக் குடத்தைக் கொண்டுவரச் செய்து, அதைச் சேற்றில் புதைத்து வரச் சொல்லுதலும் அவ்வாறே புதைத்த சில மணி நேரத்தில் அதைத் தோண்ட அது பொற்குட மாயிற்று. அதைக் கண்ட தர்பார் புலவன், 'சேற்றில் உள்ள புளிப்பால் அது அவ்வாறு பொன்னாதல் கூடும்' என்ன, குருபரன் சேற்றில் புளிப்பு இருப்பதை நீர் சேற்றைத் தின்று அறிந்தீரா? இல்லையே? அது போலத்தான் சிற்றின்பம் விளக்க அனுப விக்க வேண்டாம் என்றான் குருபரன்.

அனைவரும் குருபரன் அறிவுடைமையையும் அனுமானத் தன்மையையும் வியக்கின்றனர். குமரகுருபரன் மேற்கொண்டிருக்கும் வேடம் பொய் என்கிறார்கள். காய்ச்சிய இரும்பைத் தொட்டு மெய்ப்பிக்க, அதன் பின் அவர்கள் குருபரனுக்கு உணவு பரிமாறுகிறார்கள். அங்கு புலால் வைக்கப்பட்டிருந்ததால் குருபரன் பன்றி இறைச்சி எங்கே என்ன, அதை ஹரம் என்ன, எனக்கு இவை ஹரம் என்கிறான்! கடைசியில் பாக்ஷா கோயில் கட்ட இடம் தர இசைகிறான்.

41. மறு நாள் அதே ஈஸ்வரர் சொப்பனத்தில் தோன்றி, 'உபயகருடன்கள் வட்டமிடும் அவ்விடத்தை கேள்' என்ன.

42. அவ்வாறு கேட்டுப்பெற்று,

43. மடம் கட்டினான்; தருமம் பல புரிந்தான். கோயில் கட்டினான்.

44. தருமபுரம் ஞானசிரியனை வணங்கி உபதேசம் பெறுகிறார். நான் காசி போகேன்; தங்கள் சமூகத்தில் தான் இருப்பேன் என்கிறான்.

குரு : காட்டிருந்தாலும் மலையிருந் தாலும் கருதரிய

நாட்டிருந்தாலும் நமக்கென்ன நல்லதோர் கமலை

வீட்டிருந்தாண்டருள் ஞானப் பிரகாசன் விரைமலர்த்தாள்

கேட்டிருந்தாலும் பிறவா நெறிவந்து முட்டிடுமே

என்ன, குருபரன் காசிக்குப் புறப்படுதல்.

45. காசியில் குருபரன் முக்தியடைதல்.