மலரும் உள்ளம்

பாசமிக்க இலக்கிய வசிட்டரின் வாயால்….

சமுத்திரத்தின் எழுத்துக்கள் சமுதாயத்தில் உள்ள சில கேடுகளை, குழப்பங்களை, புண்களைப் போக்குவதற்கு என்றைக்கும் ஆயுதமாகப் பயன்படக்கூடிய எழுத்து.

- முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

முற்றும் தெளிந்த இலக்கியவாதி மூலமாய்….

வாழ்க்கையையும், மனிதர்களையும், சமூக நிலைமைகளையும் புரிந்து கொள்வதற்குத் துணை புரிவன சமுத்திரம் கதைகள். சிரிக்கவும், சீற்றம் கொள்ளவும், சிந்திக்கவும் உதவுகிற உணர்ச்சியுள்ள படைப்புகள்.

- வல்லிக்கண்ணன் அவர்கள்

ஒரு தோழமையின் கணிப்பாய்…

சு. சமுத்திரம், இலக்கியப் பத்திரிகைகளில் எழுதும்போது, அவற்றை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறார் வணிகப் பத்திரிகைளில் எழுதும்போது, அவற்றை இலக்கியத்திற்கு நெருக்கமாக கொண்டு வருகிறார்.

- - ச. செந்தில்நாதன் அவர்கள்

-

நக்கீரப் பேராசிரியர் முன்னுரையாய்…

மக்கட் பெருங்கடலுள் இரண்டறக் கலந்து ‘மானிட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எழுத்தாளர் சமுத்திரமும், இந்த மனித நேயக்குரலைத் தனது எழுத்துக்களில் இடைவிடாக எழுப்பிக் கொண்டு வருபவர்.

- முனைவர் இரா. இளவரசு அவர்கள்

பதிப்புச்செம்மல் முனைவரின் நம்பிக்கையாய்….

சமுத்திரத்தின் சக்தி வாய்ந்த எழுதுகோல் தொடர்ந்து நல்ல படைப்புகளை நல்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.

- முனைவர். ச. மெய்யப்பன் அவர்கள்

சமூகச் சிந்தனையாளர் கருத்தாய்….

சமுத்திரம் தனக்கே உரிய நடையில், சமூக அவலங்களைச் சாடுகிறார். இவரின் எழுத்தாணி, நையாண்டி நடனம் ஆடுகிறது; வாள் நுனியாக மாறி, வாழ்க்கையின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது; ஊழி நர்த்தனம் ஆடி, உலகைத் திருத்தப் பார்க்கிறது.

- பேராசிரியர். அரசு மணிமேகலை அவர்கள்