உயிரினும் இனியது உண்மைக் காதல்
கடிதத்தைப் படித்துக் கதி கலங்கிய பரிமளவல்லி தனது கண்களையே நம்பாமல் திரும்பத் திரும்ப பலமுறை படித்தாள்; "நண்பரே! இதென்ன விபரீதமான கடிதமாக இருக்கின்றதே! இதை யார் எழுதி இருப்பார்கள்! எனக்கு முன்பு அதிகப் பிரஸங்கியாய் எழுதிய மனிதர்கள் யாரேனும் தங்களையும் மிரட்ட எண்ணி இவ்விதம் செய்திருப்பார்களா! எனக்கும் ஒன்றும் புரியவில்லையே!" என்று பரிதாபமாகச் சொன்னாள். இது கேட்ட கேசவன் "பரிமளா! எது எவ்வித மிருப்பினும் சரி! உனக்கு ஒரு விதமான தீங்கும் நேரா வண்ணம் காப்பாற்றுவதே என் கடமை என நான் நினைக்கிறேன். ஆதலால் அது விஷயத்தில் நான் இங்கு வராது நிற்பதே நலம், கடவுளின் இஷ்டம் போலத்தான் யாவும் நடக்கும். அவன் திருவுள்ளம் நாம் பிரிய வேண்டியதுதான் என்று ஏற்பட்டதால் நாடகத்திலிருந்து நம்மைப் பிரித்து விட்டார். ஆகையினால் இது பற்றி வருத்தப்படாதே! நான் இனி இங்கு அடிக்கடி வராது விலகிக் கொள்கிறேன். வருந்தாதே பரிமளா!" என்றான்.
நம் உறவினரோ, சினேகிதரோ, மற்றவர்களோ நம்மை நன்றாக அறிந்திருந்தும் நம்மைப் பற்றி இழிவாகப் பேசி நமது மனத்தைப் புண்படுத்தினாலும் நாம் பொறுமையை இழந்து கோபாவேசத்திற்கு அடிமையாகக் கூடாது.
பரிமளா:-ஐயோ ! வருந்தாது சந்தோஷமாக இருப்பதற்கு இந்தக் கடிதம் வரவில்லையே! இது ஆளைக் கொலை செய்வதற்காக வந்த எமனோலையே யாகும் என்றே என் மனத்தில் படுகின்றது. நான் என்ன விதமாகத் தேறுதலை யடைவேன்? நண்பரே! இக் கடிதத்தையும் நமது எஜமானரிடத்தில் காட்டி விடுதல் நலமென்று எனக்குத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கேசவன் :- நானும் அதைத்தான் தீர்மானித்துள்ளேன். முதலில் உன்னிடம் காட்டிவிட்டுப் போகவே வந்தேன், நீ கவலைப் படாதே! நான் இக் கடிதத்தை எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் காட்டித் தகவல் தெரிந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கவனிக்கலாம். பரிமளா! ஏன் கண்ணீர் பெருக்குகின்றாய்? வேண்டாம்! நாம் நாடக உறவு கொண்டோம்; அந்நடிப்பு முடிவுற்றது என்று மனந்தேறவேண்டும். விசனித்தலால் பயன் உண்டா!" என்று கூறிச் சமாதானம் செய்துவிட்டுக் கடிதத்துடன் கிளம்பி பொன்னுசாமியின் வீட்டை யடைந்தான்.
பொன்னுசாமிக்கு கேசவனின் வருகை எப்போதும் சர்வ சாதாரணமாகையினால் அவன் அதைப்பற்றி வியப்புறவில்லை எனினும் கேசவனின் முகம் மாறுபட்டிருப்பதைக் கண்டு “கேசவா! என்ன ஒருவாறாக இருக்கிறாய்! விஷயமென்ன்?" என்று கேட்டார். கேசவன் பொன்னுசாமியிடம் சகஜமாக இருக்கக் கூடியவனாகையினால் "பெரியவரே! விஷயத்திற்கென்ன குறைவு! இதோ இக் கடிதத்தைப் பாருங்கள்' என்று அதைக் கொடுத்தான்,
பொன்னுசாமி கடிதத்தைப் பார்த்து வியப்புற்று "ஒகோ! எந்தவிதம் செய்தால் பலிக்குமென்று எண்ணி இப்போது இவ்விதம் ஆரம்பித்திருக்கிறார்களா? இருக்கட்டும். கேசவா! இதைப் பரிமளா பார்த்தாளா! அவளிடம் காட்டினாயா?" என்றார்.
நமக்குள் மறைந்து கிடக்கும் குறைவுகளைத் திருத்தவோ அல்லது அவற்றை ஒழிக்கவோ கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் அவர்கள் என்று நினைத்து பொறுமை வகிக்க வேண்டியது நமது கடமை. அப்படி நாம் முற்றிலும் மனத் தூய்மையுடனிருந்தால் அவர்களின் தீச் செயல்களுக்குத் தக்க பலனை கடவுளே அளிப்பார்.
கேசவன்:- ஆம். தந்தையே! காட்டினேன்; கண்டு அவள் மிக்க விசனிக்கின்றாள்.
பொன்னு:-ஐயோ! ஏன் அவசரப்பட்டுவிட்டாய்! இதைக் கண்டு அவள் மனம் கலங்காமலிருக்குமா! இளம் தளிராகிய அவள் மனத்தை வாட்ட விட்டாயே! இதைக் காட்டாதிருந்தால் உனக்கென்ன குறைவு? போடா போ! அசட்டுப் பையா! உனக்குள்ள அன்பு எம்மட்டும் உள்ளதென்று நான் அறிவேன். ஆனால் இதை நீ காட்டியதே பிசகு. என்னிடம் முதலில் காட்டிய பிறகு இதைப்பற்றி யோசிக்கலாகாதா! கேசவா! பரிமளா இப்போது நாடகத்திலிருந்து நின்றுபோய் சுமார் ஒரு வருடமாகப் போகின்றது. இவ்வொரு வருடகாலமாகவே கம்பெனியில் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. நடிகர்களும் ஏதோ ஒருவிதமான மாறுதலுடன் இருக்கின்றார்கள். இவைகளை நாம் கவனியாமலிருப்பினும் எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. கேசவா! நீ இக் கடிதத்தை சாதாரணமாக நினைத்துக் கொள்வதற்கில்லை. ஏனெனில் வேண்டு மென்றே உங்களிருவருக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதை வெகு குரூரமாக எழுதி இருப்பதாய்த் தெரிகிறது. ஆகையினால் எனக்கு ஒன்று தோன்றுகின்றது. அதாவது துப்பறியும் ராஜாராம் நாயுடுவினிடத்தில் இக் கடிதத்தைக் காட்டி அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடப்போம். இதில் உனக்கென்ன தோன்றுகின் றது?" என்றார்.
நமது பெற்றோரும். நம்மை வளர்த்தோரும், நமது உயிரினுமினிய நண்பராயிருந்தோரும் யாவரும், ஒரு அருவியானது குதித்துக் கூத்தாடிக் கொண்டு சமுத்திரத்தில் சேருவது போலும், பெரிய பிரவாகமுள்ள ஆற்றில் அகப்பட்டுக்கொண்ட ஒரு பழைய மரக்கலமானது அதன் அலைகளினால் ஆட் டிக் குலுக்கப்பட்டுக் கடைசியில் சமுத்திரத்தில் போய்ச் சேருவது போலும் மாயமாய்ப் போய் விட்டார்கள்- ஹா! ஈசா! நீயாவது அவ்விதம் மாயமாகச் செல்லாது என் மனத்துள் என்றும் இருப்பாயா?
இதுகேட்ட கேசவன் "தந்தையே! உங்களுடைய அபிப்பிராயத்திற்கு மிஞ்சி எதுவும் நான் கூற வல்லவனா! தங்கள் இஷ்டம் எப் படியோ அப்படியே நடக்கட்டும். என்னுடைய மனத்தில் தோன்றுவது ஒன்று தான். அதாவது, என்னால் பிறருக்கு ஒரு விதத்திலும் தீங்கு வரக் கூடாது. கபடமறியாத அக் கன்னிக்கு என் பொருட்டு ஒருவிதமான சங்கடமும் நேராமலிருந்தால் அதுவே எனக்குப் போதும்." என்றான்.
பிறகு பொன்னுசாமி அக் கடிதத்தை வாங்கிக்கொண்டு நேரே ராஜாராம் நாயுடுவின் வீட்டிற்குச் சென்றார். நாயுடு அவரை வரவேற்று விசாரித்தார். நமது பொன்னுசாமியும் யோக க்ஷேமம் விசாரித்த பிறகு தன் காரியத்தை வெளியிட்டுக் கடிதத்தையும் காட்டினார்.
நாயுடு:- (கடிதத்தைப் பார்த்து விட்டு) "இதென்ன சில்லரை விஷயம். இதற்காகக் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். பையன் நடித்து நான் பார்த்திருக்கிறேன். மிக்க யோக்கியமானவனென்று தோன்றுகின்றது.
பொன்னு:- ஆக்ஷேபனை என்ன! மகா யோத்யன். அபார புத்தியுடையவன். ஒழுக்கந் தவறாதவன். தெய்வ பக்தி யுடையவன். என்மீது உயிரையே வைத்திருப்பவன். என்னுடைய வார்த்தையை ஓர் இம்மியளவும் தட்டாதவன்.
நாயுடு:-ரொம்ப சந்தோஷம். நான் இப்போது ஒரு அவசர காரியத்தின் நிமித்தம் வெளியில் செல்கிறேன். பிறகு தங்களைப் பார்க்கிறேன்.- என்று கூறிப் போய் விட்டார். பொன்னுசாமியும் விடை பெற்றுக்கொண்டு பரிமளாவின் வீட்டிற்குச் சென்றார்.
வெளிச்சமும் உஷ்ணமும் ஒரே சூரியனிடத்து உண்டாயினும் வெளிச்சம் அதிக வேகமாகப் பல இடங்களிலும் பரவுவது போல நமது மனத்திலிருந்து ஒரே காலத்திலுண்டாகும் பலவித உணர்ச்சிகளில் ஒரு சிலவே விரைவில் வெளிப்பட்டு அவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகளை உண்டாக்குகின்றன.
அப்போது பரிமளா ஏக்கம் பிடித்து உட்கார்ந்திருந்தாள். பொன்னுசாமி அவளுக்கு வேண்டிய தைரிய மொழிகளைக் கூறிப் பின் வீடுபோய்ச் சேர்ந்தார். அன்று முதல் கேசவன் இவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. அவன் தன் வேலையைக் கவனித்துக் கொண்டு வெளியிட முடியாத விசனத்தை உள்ளடக்கியவாறு இருக் கிறான். பரிமளவல்லியைப் பார்க்காத துக்கத்தைக் கூறமுடியாது. கேசவனின் மனத்தில் அவன் தாயாரைக் காணாது தவிக்கும் பெரும் விசனத்தோடு இதுவும் சேர்ந்தது. இதனால் உடம்பு இளைத்து உருக வாரம்பித்தது.பரிமளவல்லியினிடம் காதல் கொண்டான்; ஆனால் அதை வெளியிடவும் அஞ்சித் தவிக்கின்றான். இராப்பகலாக அதையே எண்ணி ஏக்கங்கொண்டு தவித்து ஒரு தினம் அதே சிந்தாக்ராந்தனாய் உட்கார்ந்திருக்கையில் திடீரென்று நான்கு பேர் அவ்வறையில் பிரவேசித்து "அடேய் கேசவா! நான் சொல்கிறபடி ஒரு நிமிடத்தில் இக்கடிதத்தை எழுதித் தருகிறாயா! அன்றி உன்னை சுட்டுவிடட்டுமா?" என்று சுற்றிக்கொண்டார்கள்.
இந்த எதிர்பாராத சம்பவத்தினால் கேசவன் நடுநடுங்கிப்போய் அப்படியே அசைவற்று உட்கார்ந்துவிட்டான். அவனது ஆவி துடிக்கின்றது. அங்கம் பதறுகின்றது. செய்வதறியாது விழித் துக்கொண்டே "ஐயா! இதென்ன அக்ரமம், நீங்கள் யார்? இப்படிக் கள்வரைப் போல வந்து கடிபிடி செய்கிறீர்களே! நான் யாருக்கு என்ன கடிதம் எழுதவேண்டும்? அதைத் தெரிவியுங்கள்." என்று வணக்கமாகக் கேட்டான்.
இதற்குள் அந்நால்வரும் "அடேய்! என்ன தைரியம் உனக்கு? உன் முகத்திற்கெதிரில் துப்பாக்கி இருக்கையில் நீ ஏதோ சாவதானமாகக் கேட்கிறாயா! உம். நாங்கள் சொல்வது போலவே எழுது. இல்லையேல் சுட்டுவிடுவோம். உம்;'" என்று அதிகாரமாய் அட்டகாலம் செய்தார்கள். அதற்குள் ஒருவன் கேசவனின் தலை மயிரைப் பிடித்துக்கொண்டான். அப்போது அதிக அகாலமும் ஆய்விட வில்லை.இரவு 8 மணி தானிருக்கலாம். கேசவன் இருக்கும் அறை மூன்றாவது மாடியில் ஓர் தனித்த அறையாதலால் அங்கு பக்கத்தில் எவரும் சகாயத்திற்கில்லை; அப்படியும் அவன் விடாது கோவெனக் கத்தவாரம்பித்தான்.
எப்பொழுதும் மோட்டாரிலேயே சுற்றும்படியான நிலைமையிலிருந்தாலும் ஒரு சமயம் தான் கேவலமாகக் கருதும் ரிக்ஷா வண்டிக்காரனிடம் சுருட்டு பற்றவைக்க வெற்றிப் பெட்டி கேட்கும்படி நேர்ந்து விடுகின்றது. ஆனால் அப்பொழுதும் அதிகார தோரணையே முன் வந்து நிற்கின்றது.
உடனே இரு கரங்கள் அவன் குவளையைக் கெட்டியாகப் பிடித் துக் கொண்டன. கேசவனுக்கு மூச்சுத் திணறும்படியாக ஆய்விட்டதால் தத்தளிக்கின்றான்; "உம். எழுது; எழுது." என்று ஒரு பேனாவை அவன் கையில் கொடுத்து வற்புறுத்தினார்கள். அவன் சமிக்ஞைபினால் "விடுங்கள் எழுதுகிறேன்" என்றதும், குவளையை விட்டார்கள். "உம் எழுது” என்று கூறியதும் கேசவன் எழுத வாரம்பித்தான்.
"என் பிரியமுள்ள பரிமளா!
இந்தக் கடிதம் கண்ட தக்ஷணம் இவர்களோடு கிளம்பிச் சென்று விடு. இவர்கள் என் மனிதர்கள். விவரம் பிறகு நான் உன்னை நேரில் கண்டு சொல்கிறேன்.
இங்ஙனம்
கேசவன்."
என்று அவர்கள் சொல்லிக்கொண்டு வருகையில் அதைக் கேட்கும் போதே கேசவனின் உள்ளம் துடிதுடித்தது, "ஏதோ பெரிய மோச வலையை விரிப்பதற்கே இவ்விதம் இவர்கள் செய்கிறார்கள்" என்று நன்றாகத் திட்டமாகத் தெரிந்துகொண்ட உடனே, அக்கடிதத்தை முற்றும் எழுதி முடிப்பதற்குள் வெகு துணிகரமாக சடக்கென்று கிழித்து எறிந்துவிட்டு "கிராதகப்பதர்களே! என்னுயிர் போனால் பாதகமில்லை. நான் என்னுயிரைத் திருணமாக மதிப்பவன் என்பதை\ நீங்களறியீர்கள் போலும், என்னுயிரினுமினிய பரிமளவல்லியை கொடிய பாதகர்களாகிய உங்கள் கையில் நான் காட்டிக்கொடுக்க மாட்டேன். என்னைத் தயாராகச் சுட்டுக் கொல்லலாம்." என்று வெகு முடுக்காக மாரைக் காட்டி நின்றான்.
ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பிரயத்தனப்படுபவர்களுக்குப் பலவித இடையூறுகளும், துன்பங்களும் நேருவது சகஜம். ஆனால் அவை யாவும் அவர்களது மனோதைரியத்தையும், உண்மையான பக்தியையும் சோதிப்பதற் காகக் கடவுளால் உண்டாக்கப் படுகின்றன என்று நிளைத்து, அவற்றால் சற்றும் மனந்தளராமல் ஒரே பிடியாகத் தனது உயிர் போவதாயிருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தினின்றும் பின் வாங்காதிருந்தால் கடவுள் அதை எப்படியும் பூர்த்தி செய்து வைப்பார். இதற்கு உதாரணம் காதால் கேட்கும் துருவன், பிரகலாதன்• கதைகள் வேண்டியதில்லை; நாம் கண்ணால் பிரத்யக்ஷமாக இக் காலத்திலேயே காணலாம்.
எழுத வாரம்பித்ததும் சந்தோஷங்கொண்ட நால்வரும் எதிர்பாராத இச் செய்கையினால் மிக்க வியப்புற்றார்கள். ஒருவன் பேனாக் கத்தியை எடுத்தான். அதற்குள் கேசவன் "அடேய் திருட்டு நாய்களே! நீங்கள் முதலில் சுடாமலிருக்கையிலேயே தோடா இல்லாத் துப்பாக்கி என்பதை நானறிந்து கொண்டேன். பேடிகளே! இப்போது கத்தியை எடுத்துக் குத்தப் போகிறீர்களா! இதற்கு நான் சளைத்தவனன்று. தாராளமாகக் குத்துங்கள்." என்று கூறிக் கொண்டே தன் மேஜைமீதிருந்த பிகிலை எடுத்தான். அதற்குள் கேசவன் கையில் பேனாக் கத்தியால் குத்தப்பட்டது. அதையும் அவன் பொருட்படுத்தாமல் பிகிலை வெகு விசையாக ஊதினான். மீண்டும் பேனாக்கத்தியினால் அவனது தேகத்தில் அனேக இடங்களில் குத்திவிட்டு "பயலே! நீ இம்முறை தப்பினாய்; இனிமேல் தப்ப மாட்டாய் இரு" என்று கூறிக்கொண்டே அவர்கள் ஓட்டமெடுத்தார்கள்.
கேசவனின் மனத்திலுள்ள ஆவேசத்திலும் பரிமளவல்லிக்கு நேரவிருந்த ஆபத்தும் அவன் மனத்தில் பூரணமாகப் பதிந்து வேலை செய்வதால், இந்த கத்திக் குத்தையும் அவன் லக்ஷியம் செய்ய வில்லை. ரத்தம் பலவிடங்களிலும் ஒழுகுகின்றது. அதை அலம்பித் துடைத்துக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தான் எஜமானர் திருப்பதிக்குச் சுவாமிதரிசனார்த்தம் சென்றிருப்பதால் அவர் இல்லை. தான் இனி அரை நாழிகையும் தாமதிக்கலாகாதென்று எண்ணியவனாய் அவன் ஒரு வண்டியமர்த்திக்கொண்டு நேரே ராஜாராம் நாயுடுவின் வீட்டிற்குச் சென்று நடந்த சகலமான விஷயங்களை யும் விடாது கூறினான்.
அதைக் கேட்ட நாயுடு "கேசவா! நீ விசனப்படவேண்டாம். நீ பரிமளாவினிடத்தில் எத்தகைய காதல் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு நன்கு புலப்படுகின்றது. உன்னுயிரையும் திருணமாய் மதித்த உத்தமன் உனக்கு ஒரு குறைவும் வராது. இனிமேல் நான் ஒரு ஆளை உன் வீட்டில் காவல் வைக்கின்றேன்: அவன் உன் வீட்டிலிருப்பதாகப் பிறரறியாவாறு அவன் இருப்பான். ஏதேனும் விசேஷமிருப்பின் எழுதியனுப்பு: முக்கியமாயின் நேரில் வந்து கண்டு பேசு. நீ என்னிடம் சம்மந்தம் வைத்துக்கொண்டிருப்பதே ஒருவருக்கும் தெரியவேண்டாம்: ஜாக்கிரதையாய் நடந்துகொள்.' என்று எச்சரித்து அனுப்பிவிட்டார்.
அவரிடம் விடை பெற்றுக்கொண்ட கேசவன் அங்கிருந்து நேரே பரிமளாவின் வீட்டிற்கு வந்தான். அப்போது இராக்கால மாகையினால் எங்கும் நிச்சப்தம் குடிகொண்டுவிட்டது. பரிமளவல்லியின் வீடு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை இடித்தான். உடனே கதவு திறக்கப்பட்டது. கேசவன் கதவைத் திறந்த வேலைக்காரியை நோக்கி "அம்மா! உன் சின்ன எஜமானியம்மாள் இருக்கிறார்களா!" என்று கேட்டான். "இருக்கிறார்கள்" என்ற பதில் வந்த உடனே, அவ்வறைக்குச் சென்று ஓசை செய்யாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே கவனித்தான்.
பரிமளா அப்போது நித்திரை கொள்ளாது புரண்டபடியே "ஓ கடவுளே! எந்த ஊரிலேயோ கிடந்த என்னை இங்கு கொணர்ந்து, உவமையிலா உத்தமனாம் கேசவனோடு நடிக்கச் செய்து, ஆழ்ந்த அன்பையும் உண்டாக்கி, அதை வேரூன்றச் செய்துவிட்டு என்னுடைய விதியின் கொடுமையினால் என் அன்பனைப் பிரித்தும் வைத்துவிட்டாயே! இது தகுமா! அந்தோ! இன்ப வடிவமான கேசவனின் திருமுகத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன! என்னுயிரையே பிரித்திருப்பதாகவன்றோ தோன்றுகின்றது. ஹா! கேசவா! கேசவா! என்ன அழகிய பெயர்! ஒருதரம் நாமத்தை உச்சரித்தாலும் கர்ம வினை நீங்குமே! என் பாபம்தான் அத்தகைய உத்தமனைப் பிரித்துவிட்டது." என்று மனத்திற்குள்ளேயே எண்ணமிட்ட வண்ணம் "ஹா! கேசவா! கேசவா!" என்ற பாகத்தை மட்டும் உரத்துக் கூறிக்கொண்டிருப்பதைக் கண்ட கேசவனுக்கு இன்ன தென்று விவரிக்க இயலாதவிதமான ஆநந்த உணர்ச்சி யொருபுறம் பொங்குகின்றது. மற்றொரு புறமோ, "என்ன ஆகுமோ!" என்கிற ஏக்கம் வதைக்கின்றது. பரிமளவல்லியின் உண்மையான மனோபாவத்தை பகிரங்கமாக இதுபிரியந்தம் அவன் அறியாதிருந்தான். இப்போது அது நன்றாகத் தெரிந்துவிட்டதால் அவனுக்கு அது விஷயத்தில் நிரம்ப சந்தோஷம் உண்டாகிவிட்டது.
சிலர் தெருவில் நடக்கையில்தான் தமது குடும்ப விஷயங்களைப் பற் றியோ அல்லது வேறு விஷயங்களைப் பற்றியோ பற்பல விதமான சிந்தனைகள் செய்வது வழக்கம். அவர்களது மனோ ராஜ்யத்தினால் வழிமாள்வது தெரியாம லிருப்பது ஒரு அநுகூலமாயினும், வழியில் பலவித ஆபுத்துக்களுக்குத் தாங்கள் இலக்காவதுடன் பார்ப்பவர்களுக்குப் பைத்தியக்காரன் போலத் தோன்றுவது அவர்களுக்குத் தெரிவதில்லை.
தேகத்தில் கத்தியினால் பட்ட குத்துக்களும் வலி தெரியா தொழிந்தன. அவன் மெல்ல கட்டிலினருகில் சென்றான். "பரிமளா! நான் அகாலத்தில் உன்னுடைய அனுமதியின்றி அநாகரிகமாய் உள்ளே வந்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும்." என்று மரியாதையாகக் கூறி நின்றான். அதுவரையில் தன் போக்காகப் படுத் திருந்த பரிமளா இந்த குரலைக் கேட்டவுடன் அம்ருத தாரையைப் பருகியது போல மிக்க குதூகலத்துடன் எழுந்து கேசவனைக் கண்ட தும் உண்டாகிய மலர்ந்த முகத்துடனும், அடங்கா நகைப்புடனும் 'வாருங்கள்! வாருங்கள்! நான் மன்னிப்பதா! பேஷ்! பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசுவது அழகா!...... என்ன இது தேகத்தில் கட்டுக்கள்! ரத்தக்காயங்கள்........ கரைகள்!.... ஐயோ! யாது ஆபத்து விளைந்துவிட்டது?" என்று அலறியவாறு கேட்டாள்.
சிலர் மற்றவர்களைப்பற்றி "அவர்களுக்கு எல்லாவித சௌகரியங்களு மிருக்கையில் சில காரியங்களைச் சரியாய் செய்வதில்லை" என்று குறை கூறு கின்றார்கள். ஆனால் அவர்களிடம் நெருங்கிப் பழகினால்தான் அவர்களது கஷ்டங்கள் தெரிகின்றன. அப்புறம் அவர்களைப்பற்றி புகார் கூற இடமிருப்ப தில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் யாவும் வெளித் தோற்றம்தான்.
கேசவன்:- (இனிமேல் தைரியமாய் அழைக்கலாம்) கண்ணே! பரிமளா! இந்த அடையாளங்கள் - கட்டு காயங்கள்- ரத்தக் கரை கள் யாவும் என் காதலின் பரிசுகள்! என்றும் மறத்தல் கூடாத முத்திரை மார்க்குகள். பரிமளா! நடந்த விஷயத்தை நீ கேட்டால் மிக்க மனமுருகுவாய்; பயப்படுவாய். என்னுயிரினுமினிய உன்னைக் காத்தல் பொருட்டு இக் குத்துக்களையும் தாங்கிக் கொண்டேன். உயிரை விடவும் துணிந்தேன். என் இன்ப வடிவமாகிய உனக்கு ஒருவித ஆபத்தும் நேராதிருப்பின் அதுவே எனக்குப் போதும்- என்று கூறி நடந்த விஷயத்தை விரிவாக உரைத்தான்.
இதைக் கேட்ட பரிமளா திடுக்கிட்டு, நடு நடுங்கி "ஹா! கத்தி யினால் குத்தியதா இது? ஐயோ! என் பொருட்டாகத் தங்களுக்கு இத்தகைய பெரிய அபாயம் நேர்ந்து விட்டதே! இந்த அபசாரத்திற்கு நான் என்ன செய்வேன்?" என்று வருந்தி வாடி நின்றாள்.
கேசவன்:- கண்மணி ! நீ வருந்துவது சற்றும் அழகல்ல! இப்போது நடந்த சம்பவங்களைத் திருப்பி வைத்துக் கொண்டு பார்ப்போம். என்னைப் பற்றி உன்னிடம் அத்தகைய சம்பவம் ஏற்படின் நீ என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பாயா !உனக்கு மனம் துணியுமா! அதை நன்றாக யோசித்துப் பாரு.
பரிமள:- நான் என்ன பதில் பேசுவேன்? என் உயிரைக் கொடுக்கவும் அஞ்சமாட்டேன்; ஆனால் தங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். இது பரஸ்பர அன்பின் தோற்றங்கள். தாங்கள் சிரமப் படுவதையும், என் பொருட்டுக் கத்திக் குத்து பட்டதையும் காண மனஞ் சகியாமல் இவ்வாறு கூறுகிறேன். நண்பரே! இந்த ரணங்களின் பாதையை எவ்விதம் தாங்குகின்றீர்கள். எந்த சண்டாளர்கள் அவ்விதம் செய்தார்கள் என்பதை யறிய ஆள் அடையாளம் தெரிய வில்லையா! ஐயோ! நாமிருவரும் பாதேசிகள் என்பதை யறிந்து நமக்குத் தீங்கு செய்கின்றார்கள். நம்முடைய எஜமானர் கட இச் சமயம் இங்கில்லையே! என்ன செய்வது?
யாராயினும் சரி,நம் வீடேறி வந்த பிறகு, நமக்கு எவ்வளவு காரியங்கள் இருந்த போதிலும், வந்தவர்களை உபசரித்து, நமக்கு அசௌகரிய மிருப்பின் மற்றொரு சமயம் வரும்படியாகச் சொல்வது நல்லதேயன்றி அவர்களைப் பரா முகமாக நடத்தி அவர்கள் மனத்தைப் புண்படச் செய்வது யுக்தமல்ல.
கேசவன்:- கண்ணே! நான் இவ்வேளையில் இங்கு வந்ததற் குக் காரணம் தெரிந்து கொண்டாய்; இன்று நடந்த சம்பவத்தைப் பார்த்தால் வேண்டுமென்று உனக்குத் தொந்தரவு செய்வதற்காகத் தான் அக் கடிதத்தை என்னை விட்டு எழுதச் செய்தது. அதை உன்னிடம் காட்டினால் நான் அனுப்புவதாக நீ நினைத்து அவர்களோடு வந்து விடுவாய் என்கிற சூழ்ச்சியை எண்ணிச் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் உனக்கு எந்த சமயம் எத்தகைய தீங்கு விளையுமோ தெரியவில்லை. நமது எஜமானர் வந்த உடனே இவ் விஷயங்களைத் தெரிவிக்கின்றேன். அவர் எவ்விதம் செய்யும்படியாகக் கூறுகிறாரோ அவ்வழியே செய்வோம். எந்த சமயத்தில் யார் வந்து உன்னையழைத்தாலும் நீ சடக்கென்று ஏமாந்து சென்று விடாதே! வந்திருப்பவர்கள் யாரென்பதை முக்கியமாகத் தெரிந்து கொள். உன்னால் கூடுமானால் அவர்களிடம் பேசி விஷயமும் அறிந்து கொள். இன்று செய்தது போல என்னிடம் வந்து மிரட்டினாலும் நான் என்னுடைய உயிரையாவது விடுவேனேயன்றி உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னைப்பற்றி என்னிடம் கேட்டதுபோல உன்னிடம் என்னைப்பற்றி கேட்டால் நீ பயப்படாதே. தைரியமாய் மறுத்துவிடு; அன்றி பயந்துகொண்டு எழுதியனுப்பினாலும் நான் அதைக்கண்டு நம்பிவிடமாட்டேன். அதற்குத் தக்க வகையில் ஏற்பாடு செய்வேன்; கண்மணீ! உனது நித்திரை பங்கமாகின்றது.
பரிமள:-அன்பரே! எனது நித்திரை பங்கமானால் அதனால் பாதகமில்லை. உங்களுக்கு ஒருவிதமான ஆபத்தும் நேராமலிருந்தால் அதுவே போதும்! நான் கோருவது அதுதான். இரவு பகலாகக் கடவுளை வேண்டியவண்ண மிருக்கிறேன். எனது எண்ணத்தில் சதா இக் கவலையே அதிகரித்து விட்டது. இதனால் ஊணுறக்கமும் கொள்வதில்லை. சதா சிந்தித்த வண்ணமே இருக்கிறேன்; என்ன செய்வேன்? கடவுள் நமக்கு ஒருவிதமான ஆபத்துமில்லாமல் காப்பானா!
நாம் யாரிடத்தும், எக் காலத்திலும் ஒரு அனுகூலத்தை எதிர்பார்ப்பது கூடாது. ஏனெனில் அது கிடைக்காவிடில் அதிக ஏமாற்ற மடைய வேண்டி வருகின்றது. ஆகையால் பலனை அதிக ஆவலுடன் எதிர் பார்க்காமல் நமது கட மையைச் செய்ய வேண்டியது.
கேசவ:- பரிமளா! இவ்விதம் கவலைப் படுவதெல்லாம் நமது அஞ்ஞானத்தினால்தான். உண்மையான ஞானமும் பக்தியும் இருக்குமாயின் பாரத்தை அவன் சரணத்தில் அர்ப்பணம் செய்துவிட்டு நாம் அவனை நம்பி இருந்தால் நமக்குக் கவலை இல்லை, இந்த வேதாந்தம் பிறருக்குப் போதிப்பது எல்லோருக்கும் எளிதுதான்; என் மனம் மட்டும் கவலையற்று, சலனமற்று இருக்கின்றதென்று நினைக்கின்றாயோ! என்னுடைய மனத்திலிருக்கும் வேதனையை வெளியிடவே. முடியாது. என்னருமைத் தாயைக் கண்டு களிக்கும் நாளை என்னுள்ளம் எதிர் பார்ப்பதை - அந்த ஆவலை- சர்வேசன்தான் அறிய வேண்டும். கண்மணீ! உன்னுடைய உண்மையான மனோபாவத்தை இன்று நன்றாகத் தெரிந்துகொண்ட ஒரு சந்தோஷந்தான் என் இதயத்தில் பொங்குகின்றது. அச் சந்தோஷம் நிலைப்பதற்குக் கடவுளின் கருணை எவ்வித மிருக்கிறதோ! நானோ அனாதைச் சிறுவன்; நீயும் சிறுமி. உன்னுடைய நிலைமை கேவலமாக விருந்ததெனினும் நீ இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய்; என்னுடைய நிலைமையோ, அன்றையதற்குச் சிறிது மாறுபட்டிருப்பதாகத் தோன்றினாலும், மன வருத்தத்திற்கு மாறுதல் எற்படவில்லை என்பதை என்னுள்ளமன்றே அறியும்! பரிமளா! என்னுடைய விசனத்தைச் சிறிது போக்கி எனக்கு உற்சாகத்தை யளித்தது எந்தப் பொருள் எனின், அபார உணர்ச்சிக்கு ஆஸ்பதமாகிய சங்கீதமும் ஆநந்த மிக்க நடிப்பும் ஆகும், அதோடு உன்னுடைய அருமையான சினேகம் விளையாட்டுப் பருவமாகிய களங்கமற்ற நிலைமையில் சேர்ந்ததும் என் மனமடைந்த ஆநந்தம் இன்றும் கூறத் திறமன்று.
ஒரு புருஷனும் ஸ்திரீயும் தாராளமாகப் பேசினால் சிலர் அவர்கள் ஏதோ கல்மிஷமான எண்ணத்துடன் பேசுவதாக வம்பளக்கின்றார்கள். இதற்குக் காரணம் அச் சிலரது மனத்தின் பரிசுத்த மின்மையேதான்.
ஆனால், கண்ணே! இனிமேல் நான் தாராளமாக மனத்தை விட்டுக் கூறலாம். என்னுடைய மனத்தில் உண்டாகிய ஆழ்ந்த அன்பு பூர்ணமாய் என் இன்ப வடிவமாகிய உன் மேல் காதல் உருவங் கொண்டு கனிந்து விட்டது. இதுநாள் வரையில் நான் அதுபற்றி வெளியிடவும் வெட்கினேன்; அஞ்சினேன்; நீ என்ன நினைப்பாயோ! உன்னுடைய உண்மையான போக்கு எதுவோ! அதை யறியாது நான் எனது காதலைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். அதே போல இன்று வரையில் நடந்து வந்தேன்; நான் இன்று இங்கு வந்ததும் நீ யறியாவாறு உன்னை 5 நிமிடம் கவனித்தேன். உன் வாயினின்றும் உன்னை யறியாது வெளியான சிற்சில வார்த்தைகளைச் செவியுற்ற பிறகு உன் மனோபாவத்தை அறிந் தேன். கண்மணி! நான் சென்று வருகிறேன். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தால் உன்னுடைய தேகம் கெட்டு விடும்.
பரிமளா:- அன்பரே! நீங்கள் உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவித்தது போல நானும் வியக்தமாகத் தெரிவிக்க வேண்டியது கடமையல்லவா! நான் சிறு பிராயத்தில் நடித்த அளவிலேயே ஏதோ ஒருவிதமான சினேகம், அன்பு முதலியன உதித்தன. எனக்குக் குருவாகவும் இருந்து தாங்கள் சங்கீதம் முதலியவை கற்றுக் கொடுத்ததும், அன்யோன்ய பாவம் அதிகரித்திருந்ததும் என் தாயாரறிந்த விஷயமே! எனக்கு வயது வந்த பிறகு தங்களையே மணக்க வேண்டுமென்ற வேட்கை யுதித்தது. அதை வெளியிட உங்களைப் போலவே அஞ்சி லஜ்ஜையுற்றேன், என் தாயார் ஒரு தினம் தன் மனப் பூர்வமாக என்னைத் தங்களுக்கே மணம் செய்விக்க விருப்ப மிருப்பதாயும் தாங்கள் சம்மதிப்பீர்களோ, மாட்டீர்களோ என்று சந்தேகம் கொண்டிருப்பதாயும் இவ் விஷயத்தை எஜமானரிடத்திலேயே நேரில் தெரிவித்து காரியத்தை முடிக்க வேண்டுமென்றும் சொல்லி "உனக்கு இது விஷயத்தில் சம்மதந் தானா?" என்று என்னைக் கேட்டாள். என்னை மணப்பதற்குச் சம்மதமில்லையாயின் எனது சகோதரி சகுந்தலாவை மணப்பதற் குப் பிரியப்பட்டால் அவளைக் கொடுத்து விடுவதாகவும், எவ்விதமாவது உங்களுடைய சம்பந்தம் செய்து கொள்ளவேண்டு மென்றும் கூறினாள். இதைக் கேட்ட என் மனம் மெத்த மகிழ்வுற்றது. என்னுடைய சுக துக்கத்திற்குப் பாத்யதையுடைய என் அன்னையின் மனத்தைக் களிப்பிக்கவேண்டியது என் கடமை யாதலால் நான் என் மனத்திலுள்ளதை விவரித்துக் கூறியதோடு "அம்மா! என்னை மணக்கச் சம்மதப்படவில்லையாயின் நானே என் சகோதரியை மணம் செய்விக்கின்றேன்; எனக்கு அதுபற்றி சற்றும் பொறாமை இல்லை." என்று உறுதியாகக் கூறி விட்டேன். என் தாயார் மெத்த சந்தோஷங் கொண்டாள். எஜமானரின் வருகைக்கே காத்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம் அவனருள்.
ஒரு நல்ல காரித்தைப் பத்து பேர்கள் சேர்ந்து செய்தால் அது நன்றாக நிறைவேறுவதுடன் மற்றவர்களுக்கும் உற்சாகத்தை உண்டாக்குகின்றது. அஃதில்லாமல் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செய்து, தனிப் புகழ்பெற வேண்டுமென்று விலகி விட்டால் அக் காரியம் கெடுவதுடன் எல்லோருக்கும் கெளரவக் குறைவுதான் ஏற்படுகின்றது. அதனாலேயே பெரியார் " ஒன்று பட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே” என்றார் போலும்.
கேசவன் :- கண்ணே! பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அது ஈழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. 'இந்த சந்தோஷகரமான விஷயத்தைக் கேட்டு முழு மனத்துடன் ஆநந்திப்பதற்கு என் தாயார் இல்லையே!' என்கிற துக்கம் தொண்டையை அடைக்கின்றது. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு அன்னைக்கு ஈடாகுமா! என்பார்கள். அது போல என் தாயார் ஒருத்தி இருந்து அனுபவிக் கும் ஆனந்தத்திற்குச் சமானம் எது வரும்? அன்பே! "பசி; பசி" என்று வாடி, வருந்தி, கத்திக் கொண்டிருந்த சகோதரிகளையும் தாயாரையும் பிரிந்த அக் கால நினைவு இப்போதும் என் கண் முன்பு தோன்றுகின்றது. நளனையும் தமயந்தியையும் சனி பகவான் பிரித்தது போல என்னையும் என் தாயார், சகோதரிகள் ஆகியவர் களையும் விதி பிரித்து விட்டதே! நளனுக்கு ஏழரை வருடமானதும் சேரும்படியாகப் பிராப்த மிருந்தது. நான் அக் கதியுமற்று தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது இந்த துயரம் தீர்ந்து விட் டால் நான் முற்றும் கவலையற்றுக் களிப்புறும் மனிதனாவேன்.என் இன்னமுதே! இன்று நமக்கு நற்காலம், தீயகாலம் இரண்டும் சேர்ந்திருந்ததாகவே நினைக்கிறேன். ஏனெனில் இவ்விதமான ஆபத்து எனக்கு சம்பவித்ததனாலேதான் நான் இந்த வேளையில் இங்கு வரவும், அன்பு பரஸ்பரம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆயிற்று. நான் சென்று வருகிறேன்; பயப்படாதே. எந்த நேரத்திலும் கடவுளைத் தொழுது வேண்டு. அவன் காப்பாற்று வான்!" என்று கூறிப் புறப்பட்டான்.
நாம் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்தி பெரியவர்களாக மதிக்கின்றோமோ அவர்களிடம் நமது மனத்தை விட்டுப் பேசவும், தாராளமாக இருக்க வும் முடிவதில்லை. ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு விடுகின்றது.
இது கேட்ட பரிமளா "அன்பரே! சென்று வாருங்கள். நீங்களும் கூடுமான வரையில் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள் ளுங்கள். என்னுயிர் உங்கள் கையீல் தானிருக்கிறது என்பதை மறக்காதீர்கள்; இந்த காயங்களுக்குத் தக்க சிகிச்சை செய்யுங்கள். அடிக்கடி சந்திப்பதை மறந்து விடாதீர்கள்." என்று விடை பகர்ந் தாள். பிறகு கேசவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு வெளியே வந்து தன் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தான். அன்றிரவு நித்திரையே கொள்ளவில்லை. அன்று நிகழ்ந்த சம்பவத்தையே எண்ணி எண்ணி இன்பமும் துன்பமும் அடைந்தவாறு இரவைக் கடத்தினான்.
சில தினங்களாயின. எஜமானர் ஊரிலிருந்து வந்தார். வந்த உடனே கேசவன் நடந்த விஷயங்கள் சகலமானவற்றையும் தெரிவித்தான். இது கேட்ட எஜமானர் திடுக்கிட்டு "அப்புறம் எதுவும் நடக்கவில்லையா! பரிமளா சௌக்யமாக இருக்கிறாளா?” என்றார்.
கேசவன்:- சௌக்யமே.தந்தையே! நமது துப்பறியும் நாயுடுகாருவினிடம் நான் சொல்லியதற்கு அவர் தங்களுடன் கலந்து சில விஷயங்களை யோசித்துச் செய்ய வேண்டுமென்று நேற்று தெரிவித்தார். இன்று அவர் தங்களைக் காண வந்தாலும் வருவார்.
காண ஆநந்தமாய் நடந்த “பிரஜானுகூலன்" வெள்ளித் திருவிழா வைபவம் தமிழ் நாட்டுத் தமிழ்ப் பத்திரிகை யுலகத்திற்கே பெரும் புகழ்ச்சி யைக் கொடுத்தது. எல்லாப் பத்திரிகைகளும் அதனதன் சுவையில் நடை பெறி னும் நீடித்து நடக்கும் பாக்கியம் கிடைப்பதுதான் அரிது.
பொன்னு:- நானே அவர் வீட்டிற்குச் செல்ல உத்தேசித் திருக்கிறேன். நேரில் பேசிக் கொள்கிறேன். இந்த காயத்திற்கு என்ன செய்தாய்! இன்னும் சில ரணங்களிருக்கின்றனவே!
கேசவன்:- இனிமேல் அதற்கென்ன பயம், முதலில்தான் மிகவும் பாதை செய்தது. இதற்காகக் காய்ச்சலும் வந்தது. ஜன்னி கண்டு விடுமோ என்றும் பயந்தேன். இதை நான் வெளியிடவில்லை. பரிமளா இதனால் மிக்க விசனிப்பாள் என்று பயந்து பேசாமலிருந்து விட்டேன. ஆனால் நாயுடுகாரு என்னைத் தனிமையில் விட சம்மதிக்காமல் தன்னுடன் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே சிகிச்சை செய்தார். அதன் பிறகு நான் வீட் டிற்கு வந்து விட்டேன். அந்த மகானுபாவனைப் போல உலகத்திலேயே இல்லை எனலாம். வெகு உத்தமர். பரோபகாரத்தையே முதன்மையாகக் கருதுகின்றவர். நன் என்னுடைய தாயார் விஷயத்தையும் அவரிடம் தெரிவித்தேன்; அதற்கும் முயற்சி செய்வதாகச் சொன்னார்." என்றான்.
பிறகு பொன்னுசாமி "நான் சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு நாயுடுவின் வீட்டிற்குச் சென்றார். நாயுடு இவரை வர வேற்று உபசரித்து "எப்போது வந்தீர்கள்!" என்று கேட்டார்.
பொன்னு:- நான் இன்றுதான் வந்தேன், விஷயம் இன்னும் ஒன்றும் தகவல் தெரிய வில்லையா! நான் சென்று வருவதற்குள் விபரீத சம்பவங்கள் நடந்து விட்டதாமே! இதிலேதேனும் விளங்கிற்றா! இது எதோ பூடகமாகவே வேலை நடக்கின்றதே! உங்களுக்குக் கூடப் பிடி கிடைக்கவில்லை எனில் விஷயம் எப்படியாகும். எனக்கு இதே கவலையாக இருக்கிறது. பையன் உடம்பில் காயத் தைப் பார்த்தீர்களே! என்ன அனியாயம்,!
நாயுடு:-நண்பரே! இந்த விஷயத்திற்கே தாங்கள் பதறிப் போய் விடுகிறீர்கள். இதைப் போன்று பத்து பங்கு சிக்கலான வழக்கில் நான் அகப்பட்டுக் கொண்டு தத்தளிப்பதைத் தாங்கள் நேரில் பார்த்திருந்தால் என்ன நினைப்பீர்களோ! இவ்விதமான சிக்கல் எங்களுக்கு மிக்க சகஜமாகி விட்டது. ஏதோ கூடிய வரையில் நான் ஒருவாறு கண்டு பிடித்திருக்கிறேன். ஆனால் இப்போது வெளியிட மாட்டேன். எனக்கு ஒன்று தோன்றுகின்றது. அதாவது, பரிமளாவின் மீது கேசவன் தன்னுயிரையே வைத்துக் காதல் கொண்டிருக்கிறான் என்பதை நான் பல விதத்திலும் தெரிந்து கொண்டேன். அதை அவனுடைய கத்தி காயத்தினால் இன்னும் நன்றாக நிதர்சனமாகத் தெரிந்து கொண்டேன். அந்த பெண்ணும் அப்படியே என்பதை அறிந்தேன். கேசவனின் வாயினாலும் இருவருடைய மனோபாவத்தையும் அறிந்து கொண்டேன். ஆகையினால் அவர்களுடைய விவாகத்தை நாம் சீக்கிரத்தில் முடித்து விட்டால் என்ன! அவளை யபகரிக்கவோ, அன்றி அவனை அபகரிக்கவோ பகைவர்களின் சூழ்ச்சியாக விருக்கின்றது. நாம் விவாகத்தை நடத்தி விட்டால் அவ்வளவு பாதகமில்லை என்று தோன்றுகின்றது. உங்கள் அபிப்பிராயமென்ன!
ஒரு விதமான முகாந்திரத்தைக் கொண்டு பல பத்திராதிபர்களின்' தரிச னம் கிடைக்கின்றது. அவர்களின் அறிமுகமும் உண்டாகின்றது. பிறகு பழகிய சினேகிதர்களாகவும் நேருகின்றது.
பொன்னு:--என்னுடைய அபிப்பிராயம் தாங்கள் கேட்க வேண்டுமா? தாங்கள் எப்படிக் கூறுகின்றீர்களோ அதன்படிக்கு நான் நடக்கத் தயாராக இருக்கிறேன். தங்களுடன் நானும் இதைப் பற்றிப் பேசவே வந்தேன்; தாங்களே இவ்விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டீர்கள். எனக்கும் மனம் வெறுத்து சலித்து விட்டது. இது பரியந்தம் செய்த ஸ்தாபனங்கள் போதும். இனி மேல் நான் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்று சுவாமி தரிசனம் செய்து கங்கை நீராடி வாவேண்டும்; பிறகு திருப்பதி க்ஷேத்திரத் திலேயே சில காலம் மலைமீதே தங்கி இருக்க மனம் ஆவல் கொண்டிருக்கின்றது. ஆதலால் அவ்விதம் செய்யத் தீர்மானித்து விட் டேன்; இவர்களுடைய விவாகத்தை யொருவாறு முடித்து விட்டு, என்னிடமுள்ள செல்வத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி ஒருவழி செய்து விட்டு, நான் கூடிய சீக்கிரத்திலேயே புறப்பட நினைக்கிறேன். அதற்குள் இந்த விபத்துக்களும் ஒழியும், நான் என்னாலான நன்மைகளைச் செய்து விடுவது என் கடமை.
எத்தனை தீவிரமாக ஓர் சாரியத்தைச் செய்ய நினைக்கின்றோமோ அத்தனை தடைகள் அதற்கு வந்து விடுகின்றன. இதற்குள் வம்பர்களின் வாக்கோ தோன்றியவைகளை எல்லாம் கொட்டி யளக்கின்றன. வம்பு பேசும் மனி தர்களுக்குக் காரியத்தில் கலந்து கொள்ள வருவதற்கு என்னவோ மதி இல்லை. அவர்களில் சிலர் பெரிய படித்த பட்டதாரிகளாம். ஐயோ | புத்தியின் லக்ஷணமே!
நாயுடு:- அப்படியாயின் மெத்த சந்தோஷம்; நாம் இக் காரிய த்தை விரைவில் செய்து முடித்து விடுவோம்: பிறகு மற்றதைக் கவனிப்போம். பொறாமைத் தீ கொண்டு இவ்விதம் கலகம் செய்கின்றார்கள்; நீங்கள் அந்தப் பெண்ணின் தாயாரிடம் கலந்து யோசனை செய்யுங்கள்; அவர்களுடைய சம்மதியைப் பெற்ற பிறகு நாம் மேல் கொண்டு செய்வோம்.
அப்புறம் பொன்னுசாமி விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார்; கேசவனை பழைத்து, "அப்பா கேசவா! நானும் நாயுடுவும் ஒரு காரியம் நிச்சயம் செய்தோம். நீயும் பரிமளாவும் கொண்டுள்ள ப்ரேமை எத்தகைய தென்பதை நான் அறிந்துள்ளது போலவே நாயுடுவும் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆதலால் உங்களுடைய திருமணத்தை விரைவில் முடித்து விடுவதென்று நாங்கள் தீர்மா னித்து விட்டோம்; அது விஷயத்தில் உன்னுடைய அபிப் பிராயத்தையும், அவர்களுடைய அபிப்பிராயத்தையும் கலந்து கொண்டு செய்ய எண்ணுகிறேன்; நீ என்ன சொல்லுகிறாய்; உன் சம்மதமெப்படி?" என்றார்.
இவ்விதமாக அவர் கேட்பார் என்பதைக் கனவிலும் நினைக்காத கேசவனுக்கு வியப்பும் சந்தோஷமும் உண்டாயது. எனினும் தன் தாயின் துயரம் ஒருபுறம் குப்பென்று கிளம்பியது. அந்த நிலைமையில் அவன் எஜமானனிடத்தில் லஜ்ஜையோடு "தந்தையே! நான் என்ன சொல்லப் போகிறேன்! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே காரியம் நடக்க வேண்டியதே என் கருத்து. என்னை இதுபரியந்தம் பிதாவைப் போல ரக்ஷித்து வரும் உங்கள் அடிமை யல்லவா நான்!" என்றான்.
அக் காரியம் முடிந்தபின் அந்த வம்பர்களை மற்றவர்கள் "என்ன அப் போது என்னவோ வம்பளந்தீர்களே, இப்பொழுது என்ன ஆயிற்று பார்த் தீர்களா?" என்று கேட்டால் அதற்கு அவர்கள் "ஐயோ, பாவமே! நான் ஒன் றும் சொல்ல வில்லையே! யாரோ சொன்னதைத்தான் சொன்னேன்" என்று தாங்கள் முன் வம்பளந்ததையே மறைக்க முயல்கின்றார்கள்.
பொன்:- என்ன இப்படிப் பேசுகிறாய்? நான் சொல்லியது எல்லாம் உனக்குச் சட்டமாக விருப்பின் நான் பரிமளாவை மணக்க வேண்டாமென்றால் நீ நின்று விடுவாயா?
.
கேசவன் - தந்தையே! என்னுடைய சுகத்தையும் துக்கத்தையும் கோரும் தாங்கள் என் விஷயமாகச் செய்யும் எந்த காரியமும் எனக்குப் பிரதிகூலமாக இருக்காதென்கிற உறுதியை நான் கொண்டிருக்கிறேன். தங்களுடைய சித்தம் அவ்வாறிருக்குமாயின் அதுவே கடவுளின் சித்த மென்று நினைத்து நான் கிட்டாதாயின் வெட்டென மற என்றதை எண்ணிப் பேசாமலிருப்பேன்.
பொன்னு:-கேசவா! பேஷ்; நன்றாகப் பதிலுரைத்தாய்; உன்னுடைய மனோபாவத்தை நானறிந்தது போல வேறு யாருமறிந்திருக்க மாட்டார்கள். உன்னை நான் எவ்விதத்திலும் களிப்பிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். உன் மனமறிந்தும் நான் வேண்டு மென்றே கேட்டேன்; ஏன் கண்ணீர் வடிக்கின்றாய்? என்ன விசனம்?
கேசவன்:- விசனம் என்ன வென்பது தாங்களறியாததன்றே! என்னுடைய அன்னையைக் காணாது நான் கலங்கியபடியே விவாக சந்தோஷமடைய வேண்டி இருக்கின்றதே. என் தாயார் இருந்தால் எத்தனை ஆனந்தமாக விருக்கும். அதை நினைத்தால் விசனம் பொங்குகின்றது.
யார் எப்பொழுதும் மற்றவர்க்கு சிரிப்பையும், சந்தோஷத்தையும் உண் டாக்குகின்றார்களோ அவர்கள் தங்கள் மனத்திலும் முழு சந்தோஷத்தை அடைகின்றார்கள். ஆனால் சிடுமூஞ்சிகளோ தங்களுக்கு எல்லாவித சௌகரியங்களிருப்பினும் எப்பொழுதும் சந்தோஷமென்பதே அடைவ தில்லை.
பொன்னு:- வாஸ்தவம்; உன் தாயாரை உயிருடன் பறி கொடுத்தது பற்றி நானும் விசனிக்கின்றேன்; நான் எத்தனையோ விதத்தில் அந்த அம்மாளைப் பற்றித் தேடியலைந்தும் ஒருவிதமான தகவலும் தெரிய வில்லையே என்று கவலையாகத் தானிருக்கிறது. உம். என்ன செய்வது? கடவுளின் கருணை இது. இந்த விசனம் என்றைக்கும் நீங்காதது. உன் தாயாரை நேரில் கண்டால்தான் அத் துயர் தீரும். ஆகையினால் இதையே எண்ணி மேலேயாக வேண்டியதை நிறுத்துவது முடியாது. உன்னுடைய நலனைக் கோரியே நான் இதை சீக்கிரத்தில் முடித்து விட நினைக்கிறேன். நான் இப்போது பரிமளாவின் வீட்டிற்குச்சென்று விஷயத்தை வெளியிட்டு அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பெற்று வருகிறேன்-என்று கூறி விட்டுப் பரிமளாவின் வீட்டிற்குச் சென்றார்.
பரிமளா, அவள் சகோதரி, தாயார் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பொன்னுசாமியைக் கண்டதும் "வாருங்கள் உட்காருங்கள்" என்று அவரை அமரச் செய்தார்கள். "என்ன விசேஷம்? ஏதேனும் தகவல் தெரிந்ததா!" என்று பரிமளாவின் தாயார் கேட்டாள்.
இதைக்கேட்ட பொன்னுசாமி "தற்போது பெருத்த சந்தோஷ சமாசாரத் தகவலை கொண்டு வந்திருக்கிறேன். அது உங்கள் எல்லோருடைய மனத்திற்கும் மிக்க பிடித்தமாயிருக்குமென்று நம்புகிறேன்; அதாவது நான் புண்ணிய க்ஷேத்திர யாத்திரை செய்யச் செல்வதென்று தீர்மானித்துள்ளேன். தற்போது நடக்கும் சச்சரவுகள் யாவும் செல்வத்தையும், செல்வர்களையும் பொருத்தியதாக இருக்கின்றன; ஆதலால் அதற்கு ஒரு வழியைச் செய்து விடுவது உசித மென்று தோன்றுகின்றது. பரிமளாவுக்கும் கேசவனுக்கும் விலங்கு பூட்டி விடலாமென்று நினைக்கின்றேன்; உங்கள் யோசனை என்ன? இஷ்டம் எப்படி? தெரிவித்தால் மெத்த சந்தோஷம்." என்றார். இந்த எதிர் பாராத வார்த்தையைக் கேட்ட பார்வதியம்மாள் மெத்த சந்தோஷமடைந்து "ஐயா! தாங்கள்தான் எங்கள் குலத்தைக் காக்கும் புண்ணியவானாகையினால் தாங்கள் சொல்வதற்கு இரண்டாவது கிடையாது என்பது நான் கூற வேண்டுவதில்லை. பரிமளாவை உங்கள் புதல்வியாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். கேசவனின் சம்மதத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டீர்களா? என் மனப் பூர்வமாய் இந்த விவாகம் என்று நடைபெறும் என்று நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்றே எனக்கு சுதினம்." என்றாள்
இருபத்தைந்து வருஷங்களாக 'ஒருவரின் நிழல் மற்றவர்' என்று சொல்லும்படி இணைபிரியாதிருந்த தம்பதிகளே ஒரு சத்லிஷயத்தை முன்னிட்டுப் பல மாத மாதங்கள் பிரிந்திருக்க பரஸ்பரம் மனமுவந்து, அதற்கு வேண்டிய மனோ திடத்தை அடைகின்றார்கள். காலத்திற்குத் தகுந்த புத்தியை கடவுள் அளிக்கின்றார்.
பொன்:-அம்மா! கடவுளின் கிருபையினால் உங்கள் விருப்பம் ஈடேறி விடும் என்பதே எனது நம்பிக்கை: என்னுடைய கடமையில் இதையும் ஒன்றாக நான் தீர்மானித்திருக்கிறேன்; கேசவனது சம்மதத்தைப் பெற்றே நான் இங்கு வந்தேன்; மணமகளின் சம்மதம்தான் தெரியவில்லை - என்று பரிகாஸமாக நகைத்துக் கொண்டே 'பரிமளா ! கேசவனை மணக்க உனக்குச் சம்மதமில்லை எனில் தெரிவித்துவிடு; பயப்படாதே! வேறு நல்ல வானாசுப் பார்த்து நான் விவாகம் செய்து வைக்கின்றேன்." என்றார்.
பரிமள:- (குனிந்த தலை நிமிராமல் அபாரமான லஜ்ஜையுடன்) கடவுளுக்குத் தமது பக்தர்களின் மனோபாவம் நன்றாகத் தெரியும். அவ்வாறு தெரிந்தாலும் அவர்களைச் சோதியாமல் தன் பொன்னடி தருவதில்லை: அதுபோன்றே உலகத்துச் செயலும் இருக்கின்றது.
பொன்:- செல்வீ! பரிமளா! உன் உதாரணம் வெகு பொருத்த மானது, என் கண்ணே! நீ ச ற்றும் பயப்படாதே. கேசவனையும் உன்னையும் நான் ஒருபோதும் பிரிக்க மாட்டேன்; உங்கள் காதலின் மகிமையை நான் அறிவேன்.
தனது பாதி உயிராக மதித்துள்ளவர்களைப் பிரிந்திருக்க மனோதிடம் ஏற்படுகையில் தன்னுடன் கூடவே இருக்கும் குழந்தைக்குச் சற்று தலைவலி வந்துவிடின் அதைக் கண்டு சகிக்கக் கஷ்டமாயிருக்கின்றது. அவர்களது மனோ திடத்தைச் சோதிப்பதற்கே அவ்வித நிகழ்ச்சி ஏற்படுகின்றது போலும்.
என் வாழ்நாளில் நான் சண்டாளனா யிருந்துவிடினும் அதன் உயர்வு இப்போது எனக்கு நன்கு தெரிகின்றது. என் குணவதியின் உயிர் பறிபோனதே அதற்குச் சான்றாகும். கண்ணால் கண்டும் காணாதவனாய் - குருடனாய் — அவ் வுத்தமியை உயிர்ப் பலி கொடுத்தேன். ஆகையினால் நான் உங்களை அதிக நாள் பிரித்து வைக்கவும் சம்மதிக்காது சீக்கிரமே விலங்கிட்டுச் சிறைச் சாலையிலடைத்துவிட வாரண்டு தயார் செய்வதற்கே வந்தேன். நான் சென்று புரோகிதரை அழைத்து முகூர்த்த நாள் குறிப்பிட்டு விடுகிறேன். அதன் பிறகு மற்ற ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன். உங்கள் திருமணத்தை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சன்னிதானத்தில்தான் செய்ய வேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகின்றது. அவ்விடத்திலேயே செய்து விடுகிறேன். உங்களுக்கு ஆக்ஷேபனை இல்லையே!" என்றார். அதற்கவர்கள் 'இல்லை' என்றதும் உடனே அவ்விடத்தில் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
அன்றே தமது புரோகிதரை அழைத்தார், அவர் வந்து நாள் பார்த்து, தை மாதம் 27-ம் தேதி முகூர்த்தம் வைத்துக் கொடுத்துச் சென்றார். லக்னப் பத்திரிகையும் எழுதித் தயாராகி விட்டது. பரிமளாவுக்கும் கேசவனுக்கும் விவாகம் என்ற விஷயம் ஊர் முற்றும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதே பேச்சாக எல்லோரும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். விவாகத்தை பொன்னுசாமி வெகு விமரிசையாக நடத்தத் தீர்மானித்து நாயுடுவுடனேயே கலந்து யோசித்துப் பலவிதமான ஏற்பாடுகளும் செய்ய லானார்.
கேசவனுக்கு விவாக தினம் குறிப்பிட்ட வுடனே தன் தாயாரின் நினைவும், சகோதரிகளின் நினைவும் அபாரமாக உண்டாகி விட் டன. விவாகத்திற்கு இன்னும் 20 நாட்கள் தானிருக்கின்றன. இன்பமும் துன்பமும் சம இடையாகக் கேசவனின் மனத்தில் பாதிக்கின்றன. தன் தாயைக் கண்டு பிடிக்கும் வரையில் விவாகம் செய்து கொள்ள வேண்டாமென்று ஒத்தி வைக்க எண்ணினாலோ 'இத்தனை வருடங்களாக ஒரு விதத் தகவலும் கிடைக்காததுபோல இன்னும் எத்தனை வருடங்களாகுமோ!' என்று தோன் றியதால், கடவுளின் செயல் எவ்வித மிருக்கிறதோ அவ்விதமே நடக்கட்டும் என்று மனந் தேறினான்.
தலையணை யண்டையில் பேனா, பேபர், விளக்கு யாவும் இருந்தும் மனத்திலுண்டாகும் எண்ணங்களை எழுதுவதற்குச் சோம்பல் தடுத்துவிடுகின்றது. தூங்கி எழுந்தபிறகு போனது போனதுதான்.
ஒரு தினம் கேசவன் தனக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டே இருக்கையில் அதில் கீழ் வருமாறு ஒரு கடிதம் இருந்தது.
"என் ஆருயிர்ச் செல்வனான கேசவனுக்கு அனேக ஆசீர் வாதம். என் கண்ணே! கேசவா! உன்னை ஈன்ற தாய் ஒருத்தி இருக்கிறாள் என்பதே உனக்கு மறந்து விடும்படியாக நமது போதாக்காலக் கொடுமை நம்மைப் பிரித்தது. பாழும் ஏழ்மையே அதற்குக் காரணம். என் கால விதிகளை எல்லாம் நான் பிறகு கேரில் சொல்கிறேன். நீ அங்கிருப்பதாக இன்றுதான் நீ கேள்விப்பட்டு, இக் கடிதம் எழுத ஒரு பைசா காசில்லாமல் தத்தளித்து எப்படியோ பிச்சை எடுத்து இதை எழுதலானேன் நானும் உன் சகோதரிகளும் படும் கஷ்டம் கூறத் திறமன்று. நான் இக் கடிதத்தில் அச்சிட்டுள்ள இலக்கமுடைய வீட்டில் இருக்கிறேன்; அவ் வீட்டுக்காரர் பெண்ணுக்கு விவாகம்; அந்த வீட்டில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்; ஆகையி னால் க் இக் கடிதம் கண்ட தக்ஷணம் இவ்விடம் வரவும். தாமதிக்காதே.
இங்ஙனம்
உன் அன்னை கோமதி"
ஒரே காரியத்தை சிலர் "எப்படியும் ஜயமடைவோம்" என்ற தன்னம் பிக்கையுடன் ஆரம்பிக்கின்றார்கள்; வேறு சிலர் கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு யாதொரு பலனையும் கருதாது செய்கின்றார்கள்; மற்றும் சிலர் சுய நம்பிக்கையுமில்லாது, கடவுளிடத்தும் நம்பிக்கையில்லாது ஒரு விதமனப் பீதியுடன் செய்கிறார்கள். முதல் கோஷ்டியினருக்குக் கடவுன் உதவுகிறார்; இரண்டாவது கோஷ்டியாருக்கு வெற்றியைத் தாமே அளிக்கின்றார். ஆனால் கடைசி கோஷ்டியினருக்கு அபஜயமே ஏற்படுகின்றது. அவரவர்கள் மனோ பாவத்துக்குத் தகுந்தபடியேதான் யாவும் நடக்கும்.
அக் கடிதத்தைப் படித்த உடனே கேசவனுக்கு அப்படியே ஆநந்தம் பொங்கி விட்டது. "தன் தாயின் தரிசனம் தனக்குக் கிடைக்குமா!" என்று எங்கித் தவித்ததற்கு மாறாக உடனே கடிதத் தைக் கண்டதும் ஆநந்த பாஷ்பம் பெருக அப்படியே மெய் சிலிர்த்து விட்டான்.

