முன்னுரை
மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய அற்புதமான நாவல் இது. அவரது அரசியல் – சமுதாயக் கருத்துக்களை என்றென்றும் இது நமக்கு நினைவு படுத்திக் கொண்டு இருக்கும் என்பது உறுதி.
இந்த நாவல், 17-10-1943 முதல் 4-3-1945 வரை “திராவிட நாடு” இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பிறகு இதை நூலாக வெளியிடுமுன்பு, இதில் பல திருத்தங்கள் செய்ய அண்ணா விரும்பினார். ஆனால், அவரது அரசியல் பணியின் காரணமாக கடைசிவரை அது முடியாமல் போய்விட்டது. அதை இப்பொழுது ஒரே முழு நாவலாக்கி வெளியிடுகிறோம்.
அண்ணா இக்கதையை எழுதிய பொழுது இரண்டாவது உலக்ப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போரும் நடந்து கொண்டு இருந்தன. கதையின் இறுதிப்பகுதி அச்சூழ் நிலையை தொட்டுச் செல்கிறது.
--- ராணி முத்து

