அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
தோற்றம் :
15 - 9 - 1909
தந்தை:
நடராசன்
தாய் :
பங்காரு அம்மாள்
பிறந்த ஊர்
சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத்துணை
இராணி அம்மையார்
புனை பெயர்
செளமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன்
1929 - 34
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு
11 - 2 - 34
முதல் சிறுகதை 'கொக்கரகோ' ஆனந்த விகடனில் வெளிவந்தது.
1-2-36
சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு.
1936
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல்.
11 - 4 - 37
நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்
1937 -
விடுதலை, குடி அரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி
9 - 12 - 37
முதற் கவிதை, காங்கிரஸ் ஊழல் விடுதலையில்
26 - 9 - 38
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல்
13-1-39
தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை
18-1 - 39
தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.
10 - 2 - 39
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்
/td>
6- 1 - 40
பம்பாயில் பெரியார் – அம்பேத்கார் உரையாடல் : மொழிபெயர்ப்பு
2 - 6 - 40
காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு
7- 3 - 42
திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம்.
14 - 3 - 43
சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.
5 - 6 - 43
'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.
19 - 8 - 44
சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு - அண்ணாதுரை தீர்மானம் - நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.
15-12- 45
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல்
மே 1946
கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு
29 - 7 - 46
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்
25-4-47
'வேலைக்காரி' நாடகம்.
1- 6 - 47
நீதிதேவன் மயக்கம்' நாடகம்.
15 - 8 - 47
ஆகஸ்டு பதினைந்து விழா நாளே' என விளக்கம் தருதல்
28-9-47
தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை - இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்'.
14 -1 - 48
நல்ல தம்பி' திரையிடல்.
18 - 6 - 49
தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
10 - 8-49
மாலைமணி' - நாளிதழ் ஆசிரியர்.
17 - 9 - 49
தி.மு.க. தோற்றம்
18 - 9 - 49
திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை.
12 - 1 - 50
நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.
1950
திருச்சிச் சிறையில் இலட்சிய வரலாறு' எழுதுதல்.
1951
'ஆரியமாயை' நூலுக்குத் தடை
17-9-51
திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.
16-12-1951
தி.மு.க. முதல் மாநில மாநாடு.
1-8-52
சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்
15 - 6 - 53
நம்நாடு' நாளிதழ் தொடக்கம்
13- 7 - 53
மும்முனைப் போராட்டம் - மூன்று
2- 2 - 56
இணைப்புக்காகப் பொது வேலை நிறுத்தம்
29 - 4 - 57
தமிழ்நாடு சட்டமன்றத் தி. மு. கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.
9 - 6 – 57
ஓம் லேண்டு ' (Homeland) ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்
2 - 3 - 58
தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.
24 - 4 – 59
அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.
1-8-60
இந்தி எதிர்ப்பு மாநாடு - செங்கையில் அண்ணா தலைமை உரை
1962
சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை
26 - 2 - 62
சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா , நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்
2 - 8 – 62
விலைவாசி உயர்வுக் போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.
17 - 11 - 63
கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல், 16 -11 - 63 அன்றே கைதாகி, ஆறுமாதம் - சிறைத்தண்டனை ஏற்றல்.
1 - 3 - 67
தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.
14 - 4 - 67
தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல்
10-1 – 68
இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்
8 - 9 - 68
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல்
4-1-69
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு.
2- 2 - 69
புகழ் உடம்பெய்தல்

